காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு திருப்பதியில் பிக் ஷா வந்தனம் நிகழ்ச்சி!
காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு மதுரை மக்கள் சார்பில், திருப்பதியில் பிக் ஷா வந்தனம் என்ற நிகழ்ச்சி வருகிற 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மதுரை பிக் ஷா வந்தன கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்து சமயத்தில், ஆடி மாத பௌர்ணமி முதல் கார்த்திகை மாத பௌர்ணமி வரை துறவிகள் சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடிப்பர். இந்த நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் தங்கி, வேத, வேதாந்தங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வர். இம்மாதங்களில் துறவிகள் உணவு முறையில் கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வர்.

காஞ்சி ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமிகள் காமகோடி பீடத்தின் இரு ஆச்சாரியார்களும் திருப்பதி விநாயக் நகரிலுள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வருகின்றனர். இதையொட்டி மதுரை பக்தர்கள் சார்பில் ஜூலை 29 ஆம் தேதி, காலை 8 மணிக்கு சிறப்பு பிக் ஷா வந்தனம் மற்றும் பாத பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மதுரையில் பிக் ஷா வந்தன கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் வாழும் காஞ்சி சங்கராச்சாரியாரின் பக்தர்கள், மேற்கண்ட பிக் ஷா வந்தன நிகழ்வில் கலந்து கொண்டு சுவாமியின் அருள் பெற அழைக்கிறோம். இதில் பங்களிக்க விரும்புகிறவர்கள் 9442052198, 90253 02029 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளனர்.