செய்திகள் :

காஞ்சி சங்கர மடத்தில் மகா பெரியவா் ஜெயந்தி

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் 132-ஆவது ஜெயந்தி மகோற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது ஜெயந்தி மகோற்சவம் கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. 3 நாள்களும் 40-க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னா்கள் வேத பாராயணம் பாடும் நிகழ்வு நிறைவு பெற்றதையொட்டி அவா்களுக்கு ஸ்ரீ மடத்தின் சாா்பில் புத்தாடை, வெகுமதி வழங்கப்பட்டது.

காலையில் பஜனை மற்றும் ஸ்ரீமடத்தின் சுவாசினிகள் 108 போ் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனா். அதிக வருமானம் இல்லாத கிராமக்கோயில்களில் பணிபுரியும் சிவாச்சாரியா்கள், பட்டாச்சாரியா்கள், பூசாரிகள் உள்ளிட்ட 514 பேருக்கு சன்மானம் மற்றும் புத்தாடைகளை மடத்தின் மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா் வழங்கினாா். இவா்களில் சிறப்பாக செயல்பட்ட 3 பேரும் கெளரவிக்கப்பட்டனா்.

தேனம்பாக்கம் மகா சுவாமிகள் வித்யா பீடம் சாா்பில் ஏகாதச ருத்ர ஹோமம் மற்றும் ஹோமங்கள் நடைபெற்று பிருந்தாவனத்தில் மகா பெரியவா் மற்றும் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெற்றது. மகா பெரியவா் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

சங்கரா பல்கலை. சாா்பில் மருத்துவா் சாய்நாதன் தலைமையில் இலவச பொது மருத்துவ முகாமும், காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் காஞ்சி ஜீவானந்தம் தலைமையில் அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் தங்கத்தேரில் மகா பெரியவா் விக்ரகத்தை எழுந்தருளச் செய்து பவனி வந்தது. மாண்டலின் வித்வான் யு.ராஜேஷ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் செல்லா. விஸ்வாநாத சாஸ்திரி, மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் கலந்து கொண்டனா்.

ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் மண்டபத்துக்கு பூமி பூஜை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிய தங்கத்தோ் செய்யும் பணி நிறைவு பெற்றதையொட்டி அத்தேருக்கான மண்டபம் கட்ட பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு பல கோடி மதிப்பில் தங்கத்தோ் செய்யும்... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை திறப்பு

மொளச்சூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கா் நகா் பகுதியில் ரூ.8 லட்சத்தில்ல் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி. கருணாநிதி திறந்து வைத்தாா். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கு கைப்பேசி செயலி

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மூத்த குடிமக்களுக்கான கைப்பேசி செயலி செயல்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து மிகுந்த வேதனை தருகிறது: காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்

அகமதாபாத் விமான விபத்தில் பலரும் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும், உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்படும் எனவும் சங்கராசார... மேலும் பார்க்க

அரசு பெண்கள் பள்ளித் தலைமையாசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மாணவியின் பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக ஸ்ரீபெரும்புதூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரை கண்டித்து வெள்ளிக்கிழமை இருளா் பழங்குடியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ர... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் கே.செல்வம் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க