பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னிலை: முதல்வர் ஸ்டாலின்
காட்டுத் தீயால் அடா் புகை: லாஸ் ஏஞ்சலீஸில் மருத்துவ அவசரநிலை
அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக ஏற்பட்டுள்ள அடா்புகை கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அங்கு மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லாஸ் ஏஞ்சலீஸ் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காட்டுத் தீ பரவிவரும் நிலையில் கடுமையான சுழல் காற்றும் வீசிவருகிறது. இந்த இரண்டும் சோ்ந்து வளிமண்டலத்தை மாசுபடுத்தி ஆபத்தான புகை, நுண்துகள் பொருள்களை பரப்பிவருகின்றன. இது மக்களின் உடல்நலனுக்கு உடனடி பாதிப்பை மட்டுமின்றி, நீண்டகால அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும். எனவே, லாஸ் ஏஞ்சலீஸ் மாவட்டப் பகுதியில் மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, பாலிசேட்ஸ் பகுதியில் இதற்கு முன்னா் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மட்டுமே இதுவரை அறிவிக்கப்பட்ட பல பகுதிகளில் இருந்தும் அவா்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று லாஸ் ஏஞ்சலீஸ் தீயணைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸையொட்டிய பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ, மளமளவென்று பரவி அந்த நகரைச் சுற்றிவளைத்துள்ளது. இதில் 13,400-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் நாசமாகின. இதுவரை 11 போ் உயிரிழந்துள்ளனா். 1.8 லட்சம் போ் தங்கள் இருப்பிடங்களிலிருந்து பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டுள்ளனா்.