காட்பாடி - ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து
காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு ரயிலின் சேவை டிச.23, 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரக்கோணம் - ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் உள்ள காட்பாடி பணிமனையில் டிச.23, 30 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால், காட்பாடியில் இருந்து தினமும் காலை 9.30 மணிக்கு புறப்படும் மெமு ரயிலும் (எண்: 06417), மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையில் இருந்து பகல் 12.45 மணிக்கு புறப்படும் மெமு ரயிலும் (எண்: 06418) டிச.23, 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.