செய்திகள் :

காதலிக்க நேரமில்லை டிரைலர் எப்போது?

post image

காதலிக்க நேரமில்லை படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'.

நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜன. 14 ஆம் தேதி பொங்கலன்று வெளியாகவுள்ளது.

இதையும் படிக்க: கை நடுக்கம், கண்ணீர்... விஷாலுக்கு என்ன ஆனது?

முன்னதாக ஏ. ஆர், ரஹ்மான் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற, ‘என்னை இழுக்குதடி’ பாடல் வெளியாகி பெரிதாக ஹிட் அடித்தது. இரண்டாவது பாடலான, ‘லாவண்டர் நிறமே..’ மற்றும் ‘பிரேக் அப் டா’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை நாளை (ஜன. 7) வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்திரா காந்தி பலவீனமானவர்..! கங்கனா ரணாவத் பேட்டி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மிகவும் பலவீனமானவரென நடிகையும் எமர்ஜென்சி படத்தின் இயக்குநருமான கங்கனா ரணாவத் பேட்டியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975இல் பிரகடனப்படுத்திய 21 மாதங்கள் ... மேலும் பார்க்க

நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகார்: தொழிலதிபர் கைது!

கொச்சி : மலையாள நடிகை ஹனி ரோஸ் அளித்துள்ள பாலியல் புகாரரின் அடிப்படையில் தொழிலதிபர் பாபி செம்மானூர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.தன்னைக் குறிவைத்து... மேலும் பார்க்க

நேசிப்பாயா பாடல் உருவானது எப்படி? படக்குழு வெளியிட்ட விடியோ!

நேசிப்பாயா படத்தின் தலைப்பு பாடல் அறிவிப்பை குறித்து படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார். ‘நேசிப்பாயா’ எனப... மேலும் பார்க்க

சூர்யா - ஆர். ஜே. பாலாஜி படத்தின் பெயர் இதுவா?

சூர்யா - 45 படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில், த்ரிஷ... மேலும் பார்க்க

ஹிந்தி பிக் பாஸ்: ஸ்ருதிகா வெற்றிக்காக களமிறங்கிய நண்பர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை ஸ்ருதிகாவுக்கு ஆதரவாக நடிகர் புகழ் விடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிகா வெற்றி பெற தமிழக ரசிகர்கள் அனைவரும் வாக்களிக்... மேலும் பார்க்க

ரெட்ரோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்த கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா - 44 என நீண்ட நாள்களாக அழைக்கப்... மேலும் பார்க்க