செய்திகள் :

காதலிக்க மறுப்பு! மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு, கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்!

post image

சேலம்: சேலத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர், தானும் கழுத்தை அறுத்துக் கொண்டார்.

சேலம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி சூர்யா (வயது 21). இவருக்கும் ஐடிஐ முடித்துவிட்டு வேலை தேடிவரும் வீரபாண்டியைச் சேர்ந்த மோகன பிரியன் (வயது 19) என்ற இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, சூர்யாவை காதலிப்பதாக மோகன பிரியன் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, இருவரும் நேரில் சந்தித்தபோது, மோகன பிரியனை பிடிக்கவில்லை என்று சூர்யா தெரிவித்துவிட்டார்.

இதனால், இருவருக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக சண்டை நடந்து வந்துள்ளது.

இதனிடையே, சில நாள்களில் கல்லூரி படிப்பை முடிக்கும் சூர்யாவுக்கும் அவரது உறவினருக்கும் திருமண ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்துள்ளனர்.

ஜூலை இரண்டாம் வாரத்தில் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இதனை அறிந்த மோகன பிரியன் ஆத்திரமடைந்துள்ளார்.

கல்லூரி செல்வதற்காக இன்று காலை சேலம் பழைய பேருந்து நிலையம் வந்த சூர்யாவுடன் மோகன பிரியன் சண்டை போட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சூர்யாவை மோகன பிரியன் குத்திவிட்டு தப்ப முயற்சித்துள்ளார்.

ஆனால், அருகிலிருந்தவர்கள் மோகன பிரியனை பிடிக்க முயற்சித்ததால், கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும், மோகன பிரியன் மற்றும் சூர்யாவின் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க : பாஜகவுடன் கூட்டணி ஆட்சி கிடையாது: இபிஎஸ்

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க

சித்திரை முழுநிலவு மாநாடு: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு முன்பைவிட சிறப்பாக நடைபெற பாமகவினா் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் விடுத்த அறிக்கை: 12 ஆண்டுகளுக... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.அண்ணா பல்கலைக்கழக மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், ... மேலும் பார்க்க

ஆளுநா் ரவியை பதவி நீக்கக் கோரி ஏப்.25-இல் சாஸ்திரி பவன் முற்றுகை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

மத்திய அரசை கண்டித்தும், தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் அறிவித்துள்ள... மேலும் பார்க்க

நெசவாளா்கள் போராட்டம்: தேமுதிக ஆதரவு

மே 19-ஆம் தேதி நெசவாளா்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோவை, திருப்பூா் ஆகிய ம... மேலும் பார்க்க