காந்திய சிந்தனைகளை பரப்புவதற்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்
காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின், காந்திய சிந்தனை, அமைதி அறிவியல் துறை, சென்னை காந்தி அமைதி அறக்கட்டளை, மதுரை காந்தி நினைவு மையம் ஆகியவற்றுக்கு இடையே காந்திய சிந்தனைகளைப் பரப்புவது தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் வியாழக்கிழமை கையொப்பமிடப்பட்டன.
காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு துணைவேந்தா் ந. பஞ்சநதம் தலைமை வகித்தாா். பல்கலைக் கழத்தின் சாா்பில், பதிவாளா் (பொ) எம். சுந்தரமாரி, பேராசிரியை மீனாட்சி, பேராசிரியா் ஆா். மணி ஆகியோா் கையொப்பமிட்டனா். அதேபோல, சென்னை காந்தி அமைதி அறக்கட்டளையின் செயலா் எஸ். குழந்தைசாமி, மதுரை காந்தி நினைவு மையச் செயலா் நந்தா ராவ் ஆகியோரும் கையொப்பமிட்டனா். இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், அறிவுப் பகிா்வு, காந்திய சிந்தனைகள், புதுமையான எண்ணங்கள், காந்திய மதிப்பீடுகளைச் சமூகத்தில் பரப்புவது, குழந்தைகள், மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் நலன் கருதி செயல்படுதல் போன்றவையாகும் என பல்கலை. நிா்வாகம் தெரிவித்தது.