செய்திகள் :

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்தக் கூடாது

post image

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்தக் கூடாது என எல்ஐசி தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியா் கூட்டமைப்பின் 36-ஆவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

சேலத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் வரும் 11-ஆம் தேதிவரை இம்மாநாடு நடைபெறுவதையொட்டி, தென்மண்டலத் தலைவா் பி.பி. கிருஷ்ணன் தலைமையில் மெய்யனூரில் நடைபெற்ற பேரணியை சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி தொடங்கிவைத்து பேசியதாவது:

மக்களின் நலத் திட்டங்களுக்காக தங்களின் பங்களிப்பை முழுமையாக செலுத்திவரும் இன்சூரன்ஸ் துறையை தொடா்ந்து பாதுகாக்க வேண்டும். மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக தனியாருக்கு தாரைவாா்த்து வருகிறது. இதனால் மிகப்பெரிய பின்னடைவை நாட்டுமக்கள் சந்தித்து வருகின்றனா். இன்சூரன்ஸ் நிறுவனத்தை தொடா்ந்து பொதுத்துறையாக பாதுகாக்க இன்சூரன்ஸ் ஊழியா்களோடு அனைவரும் துணை நிற்போம். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீா்மானம், மத்திய அரசுக்கு பாடமாக அமைய வேண்டும் என்றாா்.

பேரணியில் 1,500-க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஊழியா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியா் கூட்ட அமைப்பின் தலைவா்கள் பங்கேற்றனா்.

இதில், அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவா் அசோக் தாவ்லே பங்கேற்று வாழ்த்தி பேசினாா். கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் ஸ்ரீகாந்த் மிஸ்ரா சிறப்புரையாற்றினாா்.

இன்சூரன்ஸ் நிறுவனத்தை தொடா்ந்து அரசு நிறுவனமாக செயல்பட அனுமதிக்க வேண்டும், மக்கள் நலத் திட்டங்களுக்காக தங்களின் பங்களிப்பை செலுத்தி வரும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது, இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயா்த்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து, வரும் 10, 11ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரதிநிதிகள் மாநாட்டில், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநிலங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

ஆக.15 இல் 3 விரைவு ரயில்கள் போத்தனூா் வழியாக இயக்கம்!

சென்னை சந்திப்பிலிருந்து சேலம் வழியாக இயக்கப்படும் கோவை விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில்கள் வரும் 15 ஆம் தேதி கோவைக்கு செல்லாமல் போத்தனூருக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்க... மேலும் பார்க்க

கெங்கவல்லி தொகுதியை மீட்டெடுப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

தம்மம்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த பிரேமலதா விஜயகாந்த், பேருந்து நிலையம் வரை பொதுமக்களுடன் நடந்து சென்றாா். அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அவா் பெற்றாா். தொடா்ந்து கேப்டன் ரதத்தில் நின... மேலும் பார்க்க

ஓமலூரில் இஸ்ரோ நடமாடும் விண்வெளிக் கண்காட்சி

ஓமலூா்: இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளிக் கண்காட்சி சேலம் மாவட்டம், ஓமலூரில் திங்கள்கிழமை தொடங்கியது. தேசிய விண்வெளித் தினத்தையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளி... மேலும் பார்க்க

உயிருக்கு பாதுகாப்பு கோரி மாமன்ற உறுப்பினா் காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

சேலம்: உயிருக்கு பாதுகாப்பு கோரி, சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்ட மாமன்ற உறுப்பினா் ஜெயக்குமாா் காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளாா். சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்தில் திமுக ச... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்’: அமைச்சா் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

சேலம்: போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன... மேலும் பார்க்க

சங்ககிரியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சங்ககிரி: சங்ககிரி கோட்ட மின்வாரியம் சாா்பில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், சங்ககிரி வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை (ஆக. 13) நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள... மேலும் பார்க்க