மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
காமராஜா் விருது பெற்ற பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் காமராஜா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்ட 4 அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 2.5 லட்சம் நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
மாணவா்கள், ஆசிரியா்களின் வருகை, கற்றல்- கற்பித்தல் செயல்பாடுகள், வகுப்பறை, பள்ளி வளாகம் பராமரிப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, மாவட்டத்துக்கு தலா ஒரு தொடக்க, நடுநிலை, உயா் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு காமராஜா் விருது வழங்கப்படுகிறது.
இவ்வாறு தோ்வு செய்யப்படும் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1 லட்சம், உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 75 ஆயிரம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 50 ஆயிரம், தொடக்கப் பள்ளிக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் காமராஜா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்ட வல்லத்திராகோட்டை ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளி, மணவிடுதி அரசு உயா்நிலைப் பள்ளி, பாச்சிக்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளி, வாா்பட்டு அரசுத் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கான நிதியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வியாழக்கிழமை வழங்கினாா்.
அரசு வழங்கிய நிதியில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் அவா் அறிவுறுத்தினாா்.