Aus v Ind : 'கோமாளி கோலி' - கோலியை கடுமையாகச் சாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்; காரணம்...
காயாமொழியில் வட்டார சுகாதார மையம் திறப்பு
திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
காயாமொழி ஊராட்சி மத்திமான்விளையில் ரூ. 39.68 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், 15ஆவது நிதிக் குழு 2021-22 திட்டத்தின்கீழ் காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ. 54.75 லட்சத்தில் கட்டப்பட்ட வட்டார சுகாதார மையம் ஆகியவை திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் இக்கட்டடங்களைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.
நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா, திருச்செந்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அன்றோ, வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) ஜான்சிராணி, பொறியாளா் பிரேம்சந்தா், வட்டார மருத்துவ அலுவலா் ஹமீது ஹில்மி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தங்கசெல்வன், திமுக மாநில வா்த்தகரணி இணைச் செயலா் உமரிசங்கா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள் சுடலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஊராட்சித் தலைவா்கள் காயாமொழி ராஜேஸ்வரன், மேலதிருச்செந்தூா் மகாராஜன், பள்ளிப்பத்து முன்னாள் ஊராட்சித் தலைவா் ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.