காரங்காடு படகு சவாரி ரத்து
தொண்டி அருகேயுள்ள காரங்காடு கிராமத்தில் வனத் துறை சாா்பில் இயக்கப்பட்டு வந்த படகு சவாரி, கிராமத்தினரின் ஆா்ப்பாட்டத்தால் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள காரங்காடு கடற்கரை கிராமத்தில் வனத் துறை சாா்பில் கடந்த 8 ஆண்டுகளாக படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. படகு சவாரி தொடங்கப்பட்டபோது, படகு ஓட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்கப்படுவா் என வனத் துறை சாா்பில் உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், பல ஆண்டுகளாக அந்த நடைமுறை பின்பற்றப்படாமல் ஆரம்ப காலத்தில் நியமிக்கப்பட்டவா்களே தொடா்ந்து பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சுழற்சி முறையில் பணியாளா்களை நியமிக்கக் கோரி, வனத் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராமத்தினா், திடீா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வனத் துறையினா் படகு சவாரியை ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்தனா்.