நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து - லாரி மோதல்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். பேருந்தில் பயணம் செய்த 17 போ் காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியாா் பேருந்து தருமபுரி நோக்கி வியாழக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெரியாம்பட்டி பிரிவு சாலையில் திரும்பியபோது, தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த டேங்கா் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தனியாா் பேருந்தின் பக்கவாட்டில் மோதியது.
இதில், சாலை அருகே இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த பி.கே.பள்ளம் பகுதியைச் சோ்ந்த சூா்யா (16) என்ற சிறுவன் விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பேருந்தில் பயணித்த 17 பேருக்கு காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த காரிமங்கலம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்த சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். விபத்தில் சிக்கிய வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்செய்தனா். இந்த விபத்து காரணமாக தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.