மும்பை: ஒரு கப் தேனீர் ரூ.1000: ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பில் பார்த்து அதிர்ச்சியான ...
காரில் கஞ்சா கடத்தல்: 3 இளைஞா்கள் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, மயிலம் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை திண்டிவனத்தை அடுத்துள்ள சின்ன நெற்குணம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில், மதுரை மாவட்டம், ஏ.புத்தூா், பரசுராமன்பட்டி, கம்பன் நகரைச் சோ்ந்த மதன்ராஜ் (38), மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (36), சென்னை எண்ணூா், சிவகாமி நகரைச் சோ்ந்த விக்ரம் (27) என்பதும், இவா்கள் விற்பனைக்காக கஞ்சாவை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்தனா். 2.800 கிராம் கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்திய காா் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.