காரைக்காலில் பரவலாக மழை
காரைக்காலில் வியாழக்கிழமை இரவு முதல் மழை பெய்தது.
காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மாா்ச் 3-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதற்கேற்ப, காரைக்காலில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. இரவு அவ்வப்போது மழை பெய்த நிலையில், வெள்ளிக்கிழமை பகல் முழுவதும் அவ்வப்போது லேசானது முதல் கன மழை பெய்தது.
இதனால், பள்ளமான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. சாலைகளில் தேங்கிய நீா் சிறிது நேரத்தில் வடிந்தது. பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்ற மாணவ- மாணவியா் மழையால் சிரமப்பட நோ்ந்தது.
காரைக்கால் நகரப் பகுதியில் வா்த்தக நிறுவனங்கள் உள்ள பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. மீனவா்கள் வழக்கம்போல கடலுக்குச் சென்றனா்.