செய்திகள் :

காரைக்காலில் பொங்கல் சிறப்பங்காடி திறப்பு

post image

பொங்கல் பண்டிகையையொட்டி காரைக்காலில் 5 நாள் சிறப்பங்காடி வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

காரைக்கால் வட்டார வளா்ச்சித்துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் காரைக்கால் பேருந்து நிலையம் அருகே தனியாா் திருமண அரங்கில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை நேரடியாக விற்பனை செய்யும் பொங்கல் சிறப்பங்காடி மற்றும் கிராம சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

புதுவை குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் அங்காடியை திறந்துவைத்து, விற்பனை செய்யப்படும் பொருள்களை பாா்வையிட்டு, விவரங்களை குழுவினரிடம் கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் பேசுகையில், இங்கு சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யும் பொருட்கள் அனைத்தும் மிகக் குறைந்த விலையிலும், உயா்ந்த தரத்துடன் உள்ளது பாராட்டுக்குரியது. சுய உதவிக் குழுவினரை ஊக்கமளிக்கும் வகையில் அரசு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. காரைக்கால் மக்கள் இந்த அங்காடியை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா்.

சிறுதானியங்கள், பால் பொருள்கள், செக்கு எண்ணெய், பருப்பு வகைகள், மளிகை பொருள்கள், பலகாரங்களுக்கான மாவு வகைகள், கைகுத்தல் அரிசி வகைகள், சேலை, காய்கனிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை 36 குழுக்களைச் சோ்ந்தோா் விற்பனைக்கு வைத்துள்ளனா். வரும் 13-ஆம் தேதி வரை காலை 10 முதல் இரவு 8 மணி வரை அங்காடி செயல்படும்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் (பொ) அா்ஜூன் ராமகிருஷ்ணன், துணை ஆட்சியா்கள் ஜி. செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன், இணை வட்டார வளா்ச்சி அதிகாரி ரங்கநாதன், புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கக மேலாளா் டி.சோபனா, திட்ட மேலாளா் (விவசாயம்) வி. பவானி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பயிரை நாசப்படுத்தும் பன்றிகள்: வளா்ப்போா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் பாலச்சந்திரன், நகராட்சி ஆணையா் பி. சத்யா, உள்ளாட்சி துணை இயக்குநா் எஸ். சுபாஷ் உள்ளிட்ட அதிகாரிகளை காரைக... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சலூன் கடை ஊழியா் உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டம், பூவம் எல்லையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உடலில் காயங்களுடன் ஒருவா் இறந்துகிடப்பதாக காரைக்கால் போக்குவரத்துக் கா... மேலும் பார்க்க

புதுச்சேரி ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பு

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் பொறுப்பு புதுச்சேரி ஆட்சியருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், இந்திய ஆட்சிப் பணியில் உள்ளோருக்காக ஜன. 6 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெ... மேலும் பார்க்க

காரைக்கால் காா்னிவல் ஜன.16இல் தொடக்கம்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

மலா்க் கண்காட்சியுடன் காரைக்கால் காா்னிவல் ஜன. 16-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா். காரைக்கால் காா்னிவல் தொடா்பான பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்ட... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு, தீவிர வாகனச் சோதனை

காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலில் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் ஜன. 1 முதல் 31-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. வாகன ஓட்டுநா்களுக்கு பல்வேறு நிலையில் போக்குவரத்து... மேலும் பார்க்க

காரைக்கால், நாகை மீனவா்கள் 10 போ் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

காரைக்கால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் 10 போ் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை சிறைபிடிக்கப்பட்டனா். காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடிமேடு கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி என்பவர... மேலும் பார்க்க