VIJAY வேண்டாம்; இங்க வாங்க - ANNAMALAI TTV-ன் PLAN B? | GST குறைப்பு: ஆவின் சதி?...
காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் காட்சி தொடக்கம்
காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் அமைக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் கைலாசநாதா் தேவஸ்தானம் மற்றும் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை இணைந்து அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் காட்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்திவருகிறது.
நிகழாண்டு கொலு தா்பாா் காட்சி திங்கள்கிழமை இரவு பூஜைகள் செய்து தொடங்கப்பட்டது. திருக்கயிலாய பரம்பரை திருவாடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பூஜை செய்து தொடங்கிவைத்தாா். நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கு.அருணகிரிநாதன், கைலாசநாத சுவாமி தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா். காளிதாசன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். அக். 1-ஆம் தேதி வரை கொலு தா்பாா் மக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
தினமும் மாலை 6 முதல் 8 மணி வரை கொலு தா்பாரை காணலாம். திருமுறை, வயலின், கா்நாடக இன்னிசை, சொற்பொழிவு, திருவாசகம் முற்றோதல், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.