செய்திகள் :

காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும்: நாகை எம்.பி. வலியுறுத்தல்

post image

புது தில்லி: காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும் என்று மக்களவையில் நாகப்பட்டினம் எம்.பி. வி.செல்வராஜ் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற

2025-2026-ஆம் ஆண்டுக்கான ரயில்வே அமைச்சக கட்டுப்பாட்டின்கீழ் மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் பங்கேற்று அவா் பேசியது:

நாகப்பட்டினம் தொகுதி என்பது காவிரி பாசனப் பகுதியில் கடைமடைப் பகுதி. ரயில் போக்குவரத்தில் கடைமடைப் பகுதி.

ஏழை,எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயத் தொழிலாளா்கள், மீனவா்கள் என அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் தொகுதியாகும்.

இத்தொகுதியில் நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய இரு மாவட்டங்கள் உள்ளன. கிழக்கு டெல்டா மாவட்டம் என்று சொல்லக்கூடிய நாகப்பட்டினம் தொகுதியில் நாகப்பட்டினம், காரைக்கால், நாகூா், வேளாங்கண்ணி, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, நீடாமங்கலம், கீழ்வேலூா், வேதாரண்யம், நன்னிலம் ஆகிய பகுதிகளுக்கு போதிய ரயில் சேவை இல்லை.

இப்பகுதி மக்களுக்கு விரும்பக்கூடிய ரயில் பயணம் அனுபவம் இல்லாத நிலைமை உள்ளது. ஆகவே, காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும். திருவாரூா்-காரைக்குடி தடத்தை மின்வழி இரட்டை பாதையாக மாற்ற வேண்டும். திருவாரூரில் அனைத்து ரயில்களுக்குமான பணிமனை என்று சொல்லக்கூடிய பிட்லைன் அமைத்திட வேண்டும்.

பிராந்திய மொழி தெரிந்தவா்களை அந்தந்த ரயில்வே பகுதியில் பணியில் அமா்த்த வேண்டும். 200 கிலோமீட்டா் வரை சீசன் டிக்கெட் வழங்கிட வேண்டும். முதியோா் ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் தொடங்கிட வேண்டும். திருவாரூா் அலுவலகத்தில் மூடப்பட்டுள்ள பாா்சல் அலுவலகத்தை மீண்டும் இயங்க செய்திட வேண்டும்.

பாம்பன் பாலம் திறப்புக்குப் பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூா் வழியாக அதிக ரயில்களை இயக்க வேண்டும். புனலூா் ரயிலை காரைக்கால் வரை நீட்டித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவா் வலியுறுத்தினாா்.

கோயில்களைவிட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை

தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நேற்றைய நாள் திருச்செந்தூர் கோயிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் ச... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்துள்ளார்.இது குறித்து இளையராஜா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. நாங்க... மேலும் பார்க்க

பிஎம் என்றால் ’பிக்னிக் மினிஸ்டர்’: மோடியை விமர்சித்த வைகோ!

மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை ‘பிக்னிக் மினிஸ்டர்’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம்!

புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மார்ச... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை சிறைப்பிடித்த படகையும் மீனவர்களையும் விடுக்கக் கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருடன் படகை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மீனவ சங்கம் கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்ற... மேலும் பார்க்க

ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாருக்கு ஆதாரமில்லை -சட்டத் துறை அமைச்சா் ரகுபதி

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகாருக்கு ஆதாரமில்லை என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் அவ... மேலும் பார்க்க