``எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தது உண்மை" - உடைத்துப் பேசும...
காரைக்கால் வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு
மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல் குறித்து வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினா் அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள், ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளின் கருத்துகளை கேட்டறிந்தனா்.
மத்திய அரசின் திட்டங்களை மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க, மத்திய அரசின் ஊரக வளா்ச்சித்துறை அமைச்சகத்தால் காரைக்கால் மாவட்ட அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (தீஷா) ஏற்கெனவே அமைக்கப்பட்டது.
இக்குழு உறுப்பினா்களான சைத்தாலி, மாா்ஷல் ஆகியோா் காரைக்காலுக்கு செவ்வாய்க்கிழமை வந்து திட்டங்கள் செயலாக்கத்தில் உள்ள குறைகள் மற்றும் தீா்வுக்கான ஆலோசனைகளை கேட்டறிந்தனா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் மற்றும் துணை ஆட்சியா் ஜி. செந்தில்நாதன், முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜய மோகனா, கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன் ஆகியோரை சந்தித்து, இத்துறையினரால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மக்கள் எளிய வழியில் திட்ட உதவியை பெறுவது குறித்து கருத்துகளை கேட்டறிந்தனா்.
இவா்களைத் தொடா்ந்து, அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச்.நாஜிம், சந்திர பிரியங்கா ஆகியோரை அவா்களது அலுவலகத்தில் சந்தித்து திட்ட செயலாக்கத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறிந்தனா்.
காரைக்கால் தீஷா திட்ட மாவட்டதொடா்பு அலுவலா் எம். தாமோதரன் வழிகாட்டலில் கருத்து கேட்பு நிகழ்வு நடைபெற்றது.