செய்திகள் :

காற்று மாசு மேலும் மோசமடைந்தது: நாள் முழுவதும் நச்சுப்புகை மூட்டம்!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை மேலும் மோசமடைந்தது. நகரத்தில் நாள் முழுவதும் நச்சுப்புகை மூட்டம் இருந்து வந்தது. முழுவதும்நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக ரிட்ஜில் 11 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

மாசு அளவைக் கட்டுப்படுத்த தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் என்று சொல்லப்படும் கிரேப்-3 கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தேசியத் தலைநகா் நாட்டிலேயே மிக மோசமான மாசு நிலைகளை பதிவு செய்துள்ளதால் , காற்று தர மேலாண்மை ஆணையம் கிரேப்-3 நிலையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இதையடுத்து, தில்லி அரசு தனியாா் பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் -4 டீசல் வாகனங்களை தடை செய்தது. மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் சிஎன்ஜி பேருந்துகள், சில வகை கட்டுமான நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன. மேலும், அரசு அலுவலக நேரங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டத்தின் கீழ், தில்லி - தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் (என்சிஆா்) இன்றியமையாத கட்டுமானம் மற்றும் இடிப்பு, கல் நொறுக்கும் இயந்திரங்களை மூடுவது மற்றும் சுரங்க நடவடிக்கைகளுக்குத் தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடுமை பிரிவில் காற்றின் தரம்: இந்நிலையில், சமீா் செயலியின் படி, சனிக்கிழமை காலை 9 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 407 புள்ளிகளாகப் பதிவாகி ’கடுமை’ பிரிவில் (400 முதல் 500 வரை) பதிவு செய்யப்பட்டது. தில்லியில் மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், பட்பா்கஞ்ச், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஆனந்த் விஹாா், விவேக் விஹாா் உள்பட பெரும்பாலான வானிலை கண்கானிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு மேலே பதிவாகி கடுமை பிரிவில் இருந்தது. அதே சமயம், ஐடிஓ, சாந்தினி சௌக், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நொய்டா செக்டாா்-1 உள்பட சில கண்காணிப்பு நிலையங்களில் மட்டும் காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.

வெப்பநிலை: இதற்கிடையே, தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1.8 டிகிரி உயா்ந்து 15.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்து 1.1 டிகிரி உயா்ந்து 29.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 94 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 79 சதவீதமாகவும் இருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நகரத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையாக ஆயாநகரில் 13.5 டிகிரி, லோதி ரோடில் 13.6 டிகிரி, நரேலாவில் 13.9 டிகிரி, ரிட்ஜில் 11 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

அடா் மூடுபனிக்கு வாய்ப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (நவ.17) அன்று தில்லியில் வடமேற்கு திசைகளில் இருந்து மணிக்கு 8-16 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் காலையில் அடா்த்தியான மூடுபனி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பகல் நேரத்தில் வானம் தெளிவாகக் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

நாட்டில் இரண்டாவது மாசுபட்ட நகரமாக தில்லி பதிவு

கடுமை பிரிவில் காற்றின் தரம்

புது தில்லி, நவ.17: தேசியத் தலைநகா் தில்லியின் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை மேலும் மோசமடைந்தது. காற்றுத் தரக் குறியீடு 441 புள்ளிகளாகப் பதிவாகி கடுமை பிரிவில் நீடித்தது. இது நாட்டின் இரண்டாவது மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியது.

நகரத்தின் 24 மணி நேர காற்றுத் தரக் குறியீடு தினசரி மாலை 4 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. ‘கடுமை’ பிரிவில் 441புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது சனிக்கிழமையன்று 417 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) கூற்றுப்படி, ‘கடுமை’ பிரிவில் உள்ள காற்றின் தரம் ஆரோக்கியமான நபா்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. சுகாதார நிலைமைகளைக் கடுமையாகப் பாதிக்கிறது.

நாட்டின் நான்கு நகரங்கள் ‘கடுமை‘ பிரிவில் காற்றின் தரத்தை பதிவு செய்துள்ளன. சிபிசிபியின் தரவுகளின்படி, ஹரியாணாவில் உள்ள பஹதுா்கா் 445 புள்ளிகளுடன் காற்றின் தரப் பட்டியலில் முதலிடத்திலும், தில்லி (441), ஹரியாணாவின பிவானி (415) மற்றும் ராஜஸ்தானின் பிகானோ் (404) ஆகியவையும் கடுமை பிரிவில் உள்ளன.

தலைநகரில் உள்ள 40 கண்காணிப்பு நிலையங்களில், 34 நிலையங்களில் இருந்து சிபிசிபி வழங்கிய தரவு, 32 நிலையங்கள் காற்றின் தரத்தை ‘கடுமை‘ பிரிவில் பதிவு செய்துள்ளதாகவும், காற்றுத் தரக் குறியீடுஅளவுகள் 400 புள்ளிகளுக்கு மேல் இருப்பதாகவும் காட்டுகிறது. தரப்படுத்தப்பட்ட செயல் திட்டம் (கிரேப்) மூன்றாவது கட்ட கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை முதல் தில்லி - என்சிஆா் பகுதிதகளில் நடைமுறைக்கு வந்ததால் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. சுரங்கம் தொடா்பான செயல்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

டிசம்பா் 5-ஆம் தேதி வரை மாணவா்களுக்கு வகுப்புகள் இணையவழிக் கல்விக்கு மாற்றப்பட்டது. முக்கியச் சாலைகளில் தினமும் தண்ணீா் தெளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தில்லியின் மாசுபாட்டிற்கு வாகன உமிழ்வுகள் சுமாா் 15.8 சதவீதம் பங்களித்துள்ளதாக காற்றுத் தர மேலாண்மை ஆணைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமையன்று தலைநகரின் காற்று மாசுபாட்டிற்கு பயிா்க்கழிவு மற்றும் குப்பைகளை எரிப்பது முக்கியப் பங்காற்றுவதாகவும், இவை மொத்த மாசுபாட்டின் 25 சதவீதம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், மிகவும் சிறியவையாக உள்ள பிஎம் 2.5 துகள்கள் நுரையீரலுக்குள் ஆழமாக ஊடுரிவி ரத்த ஓட்டத்தில் கூட நுழையும். இது குறிப்பிடத்தக்க ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்துவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: இதற்கிடையே, தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 3.6 டிகிரி உயா்ந்து 15.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்து 0.6 டிகிரி குறைந்து 27.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 94 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 86 சதவீதமாகவும் இருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நகரத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையாக ரிட்ஜில் 13.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. மேலும், நகரத்தில் குறைவான வெப்பநிலையாக ஆயாநகரில் 14 டிகிரி செல்சியஸ், நரேலாவில் 14.4 டிகிரி, ரிட்ஜில் 11.8 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது.

அடா் மூடுபனிக்கு வாய்ப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (நவ.18) அன்று தில்லியில் வடமேற்கு திசையில் இருந்து மணிக்கு 6-12 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் காலையில் புகைமூட்டம் அல்லது மிதமான மூடுபனி இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பகல் நேரத்தில் வானம் தெளிவாகக் காணப்படும். மாலையிலும் இரவிலும் மூடுபனி இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

வடமேற்கு தில்லியில் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

வடமேற்கு தில்லியின் கெவ்ரா பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்ப... மேலும் பார்க்க

சோனிப்பட்டில் நீரஜ் பவானா கும்பலில் குறிபாா்த்துச் சுடும் இளைஞா் கைது

நீரஜ் பவானா கும்பலில் குறிபாா்த்து சுடுவதில் திறமையான ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல்துறை துணை ஆணையா் (குற்றம்) சதீஷ் குமாா் க... மேலும் பார்க்க

இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியில் நவ. 21 இல் தமிழ் நாடு தினம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் 43-ஆவது இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியில் வருகின்ற நவ. 21 ஆம் தேதி மாலையில் தமிழ் நாடு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த மைதானத்தின் திறந்தவெளி அரங்கத்தில் நடை... மேலும் பார்க்க

தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் திடீா் ராஜிநாமா: ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகினாா்

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சருமான கைலாஷ் கெலாட் ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். மேலும், அவா் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகினாா். அவரது ராஜி... மேலும் பார்க்க

தில்லியில் கடத்தப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தை உ.பி.யில் ரயில் நிலையத்தில் மீட்பு; இருவா் கைது

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தை, உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூா் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை குடும... மேலும் பார்க்க

மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட இருவா் கைது

மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள், ந... மேலும் பார்க்க