செய்திகள் :

காலணிகளைக் கழற்றி, சிறப்புப் பூஜை, லண்டன் இந்து கோயிலில் வழிபட்ட பிரிட்டன் மன்னர் சார்லஸ்

post image

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா, லண்டனில் உள்ள புகழ்பெற்ற பிஏபிஎஸ் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலுக்கு நேற்று வருகை தந்து, அங்கு நடைபெற்ற 30ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

ஐரோப்பாவில் இருக்கும் இந்த பாரம்பரிய கற்கோயிலில், இந்து மரபுகளின்படி அவர்கள் வழிபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

கோயிலுக்கு வருகை தந்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

கோயிலின் தலைமை அர்ச்சகர், மன்னரின் மணிக்கட்டில் புனித கயிற்றைக் கட்டியிருக்கிறார். மன்னரும் ராணியும் தங்களது காலணிகளைக் கழற்றிவிட்டு, முத்துக்கள் மற்றும் மலர்களால் ஆன மாலைகளை அணிந்து கோயிலுக்குள் சென்றனர்.

King Charles ,Queen Camilla visit BAPS Shri Swaminarayan Mandir

அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு "தாமதமான தீபாவளி வாழ்த்துகளையும்" அவர் தெரிவித்துக் கொண்டனர். கடந்த 1995-ம் ஆண்டு திறக்கப்பட்ட நீஸ்டன் கோயிலுக்கு, மன்னர் சார்லஸ் இதற்கு முன்பும் வந்திருக்கிறார். அவர் இதற்கு முன்பு 1996, 2007, மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளிலும் இந்த கோயிலுக்கு வருகை தந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகில் முதல் முறை! - ஸ்பெயின் காடுகளில் தென்பட்ட வெள்ளை நிற சிவிங்கி பூனை - ஆர்வலர்கள் ஆச்சரியம்

ஸ்பெயினில் புகைப்படக் கலைஞர் ஒருவரின் கேமராவில் சிக்கிய அரிய வகை வெள்ளை ஐபீரியன் லின்க்ஸின் புகைப்படம் (சிவிங்கி பூனை) , உலகெங்கிலும் உள்ள விலங்கு ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.ஸ்பெயினில் உல... மேலும் பார்க்க

Apollo: தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி கொண்ட சென்னை அப்போலோ

சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனைகள், பக்கவாதத்திற்கு அதிநவீன சிகிச்சைகளை அளிக்கும் தனது 'அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்’ (Apollo Advanced Stroke Network)-ஐ விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

சிறுநீரகப் பிரச்னையுடன் தமிழக விவசாயிகள்; எச்சரிக்கும் சர்வதேச மருத்துவ இதழ்!

அரை நூற்றாண்டுக்கு முன்புவரை நீரிழிவு, புற்றுநோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களை மிக மிகக் குறைவாகத்தான் கண்டு வந்தோம். ஆனால், இப்போதோ இந்த வாழ்வியல் பிரச்னைகளால் பாதி... மேலும் பார்க்க

Grokipedia: விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோக்பீடியா - எலான் மஸ்கின் திட்டம் என்ன?

அரசியல் முதல் வரலாறு வரை எது பற்றிக் கேட்டாலும் விக்கிபீடியாவில் அனைத்தும் கிடைக்கும். சில நிமிடங்களில் ஒரு தகவல் குறித்த அடிப்படையான தகவல்களை தெரிந்துகொள்ள உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் ... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் குதிரை, ரூ.23 கோடியில் எருமை! - புஷ்கர் கண்காட்சியில் கவனம் ஈர்த்த விலங்குகள்

ராஜஸ்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற புஷ்கர் கால்நடை கண்காட்சி, இந்த ஆண்டும் களைகட்டியது. ஆயிரக்கணக்கான கால்நடைகள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சியில் முக்கிய நட்சத்திரங்களாக ரூ.15 கோடி மதிப்புள்ள... மேலும் பார்க்க

700 மரங்களுடன் ஜாக்கி ஷெராஃப் பண்ணை வீடு: ஏரி முதல் திறந்த தியேட்டர் வரை சுவாரஸ்ய ரகசியங்கள்!

பாலிவுட் நடிகர்கள் அனைவருக்கும் மும்பைக்கு வெளியில் பண்ணை வீடுகள் உள்ளன. ஷாருக் கானுக்கு மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான அலிபாக்கில் பண்ணை வீடு உள்ளது. சல்மான் கானுக்கு மும்பை அருகில் பன்வெல் என்ற இடத்... மேலும் பார்க்க