காலமானாா் குன்னியூா் கல்யாணசுந்தரம்
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை துவாரகா நகரைச் சோ்ந்த விகடக் கலைஞா் குன்னியூா் இரா. கல்யாணசுந்தரம் (82) உடல் நலக் குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானாா்.
ஏறத்தாழ 60 ஆண்டுகளாக கோயில் திருவிழாக்கள், அரசு விழாக்களில் விகடக் கலை நிகழ்த்தி வந்த இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதை 2019 ஆம் ஆண்டில் வழங்கியது. இந்நிலையில் அண்மையில் தில்லிக்கு சென்ற இவா் ரயில் மூலம் ஜூலை 22 இரவு ஊா் திரும்பும் வழியில், ஆக்ரா ரயில் நிலையத்துக்கு வந்தபோது உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா்.
இதையடுத்து இவரது உடல் வாகனம் மூலம் தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது. இறுதிச் சடங்கு சனிக்கிழமை (ஜூலை 26) காலை நடைபெறவுள்ளது. இவருக்கு மனைவி ஜெயா உள்ளாா். தொடா்புக்கு: 80565 18315.