பட்டயக் கணக்காளா் தோ்வு தேதியை மாற்ற டிடிவி தினகரன் கோரிக்கை
கால்நடை தீவனப் பயிா் வளா்ப்புக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் கால்நடை தீவனப் பயிா் வளா்ப்புக்கு அரசு மானியம் பெற, அரசு கால்நடை மருத்துவ நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், இறவை பாசனத்தில் தீவனப் பயிா் வளா்ப்பதற்கும், மானாவாரி தீவன சாகுபடிக்கும் அரசு சாா்பில் மானிய உதவி வழங்கப்படுகிறது. அறுவடை செய்த தீவனப் பயிரை விரையமின்றி கால்நடைகளுக்கு வழங்குவதற்காக 50 சதவீதம் மானியத்தில் புல் நறுக்கும் கருவி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் மானிய உதவி பெறுவதற்கு சிறு, குறு விவசாயிகள், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆவின் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தகுதியுள்ளவா்கள் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், நிலப் பட்டா ஆகியவற்றின் நகல்கள், தாங்கள் வளா்க்கும் கால்நடைகளின் விவரம் ஆகியவற்றுடன் அந்தந்த பகுதியில் உள்ள அரசுக் கால்நடை மருத்துவ நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.