3 நாடுகளின் ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி: மத்திய அரசு நடவடிக்கை
கால்நடை வளா்க்க நவ. 12, 19, 26 - இல் இலவசப் பயிற்சி
தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் நவம்பா் 12, 19, 26 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத் தலைவா் கே. ஜெகதீசன் தெரிவித்தது:
தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாட்டு பண்ணையம் குறித்து நவம்பா் 12 ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளா்ப்பு குறித்து 19 ஆம் தேதியும், நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்து 26 ஆம் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இப்பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியமில்லை. மேலும் விவரங்களுக்கு 04362 - 264665 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடா்பு கொள்ளலாம்.