செய்திகள் :

கால்பந்து வீரரிடம் வழிப்பறி! வாகனம் பறிப்பு!

post image

தென் அமெரிக்க நாடான உருகுவேவைச் சேர்ந்த கால்பந்து வீரரிடம் மெக்சிகோ நாட்டில் வழிப்பறி செய்யப்பட்டு அவரது வாகனம் பறிக்கப்பட்டுள்ளது.

உருகுவே நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் நிகோலஸ் ஃபோன்சேகா (வயது 24) இவர் மெக்சிகோவைச் சேர்ந்த லியோன் எனும் கால்பந்து கிளப்பிற்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், அவர் தனது அணியுடன் பயிற்சி மேற்கொள்வதற்காக மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாநிலத்தின் லியோன் நகரத்தை நோக்கி தனது நான்கு சக்கர வாகனத்தில் (டிரக்) பயணம் செய்துக்கொண்டிருந்தார்.

அப்போது, ஜலிஸ்கோ மாநிலத்தின் அருகிலுள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரிடம் வழிப்பறி செய்து அவரது வாகனத்தை பறித்து சென்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், நிகோலஸ் கடத்தப்பட்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கிவிடப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில் அவரது கால்பந்து அணி அதனை மறுத்துள்ளது.

இதையும் படிக்க: 'டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது'- ஸெலென்ஸ்கி

இதுகுறித்து அவரது அணியின் தரப்பில் நேற்று (பிப்.28) வெளியிடப்பட்ட அறிக்கையில், நிகோலஸ் தற்போது நலமாகவுள்ளதாகவும், அவரது அணியினருடன் இணைந்து வரக்கூடிய போட்டிக்காகத் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியான வதந்திகளுக்கு கவனம் செலுத்தவோ அல்லது போலிச் செய்திகளை வெளியிடவோ வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழிப்பறியானது எப்போது நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, நிகோலஸிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க குவானாஜுவாடோ காவல் துறையினர் ஜலிஸ்கோ அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளனர்.

முன்னதாக, இந்த சம்பவம் நடைபெற்ற குவானாஜுவாடோ மாநிலத்தில்தான் மெக்சிகோவின் அதிகப்படியான குற்றச்செயல்கள் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறை வெளிநாடு பயணம் செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!

பாகிஸ்தானில் முதல் முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் அந்நாட்டு மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா, குஜராத், சியால்கோட், மண்டி, பஹாவுத்தீன் மற்றும... மேலும் பார்க்க

போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்! முகத்தில் உருவான ஓட்டை!

அமெரிக்காவில் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையான பெண்ணின் முகத்தில் ஓட்டை உருவாகி அவருக்கு தற்போது 15க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இலினொயிஸ் மாகாணத்தின் சிகாகோ நகரத்தைச் சேர்ந்... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்கா: புதியதாக மூன்று குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு!

தென் ஆப்பிரிக்கா நாட்டில் மூன்று புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறையின் செய்தி தொடர்பாளர் ஃபோஸ்டர் மொஹாலே கூற... மேலும் பார்க்க

மசூதியில் குண்டு வெடிப்பு: தலைமை இமாமை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கைபர் பக்துன்குவாவின் மொந்ஷேரா மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தின் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அம்பலா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (மார்ச்.1) வழக்கு விசாரணைக்காக ஒரு நபர் ஆஜராகியுள்ளார். அப்போது... மேலும் பார்க்க

அசாம்: ரூ.2.2 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.சாச்சார் மாவட்டத்தில... மேலும் பார்க்க