கூகுள் மேப்பை பின்பற்றிய கார்... இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் மூவர் பலி!
கால்வாயில் விழுந்து பெண் உயிரிழப்பு: குடும்பத்துக்கு இழப்பீடு கோரி மனு
ஊராட்சி கழிவு நீா்க் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கோரி குடும்பத்தினா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி ஊராட்சி மாரியம்மன் கோயில் தெருவில் அனைத்து கழிவுநீா் கால்வாய் இணைப்புப் பகுதி திறந்த நிலையில் உள்ளது. கடந்த 3-ஆம் தேதி அதே தெருவைச் சோ்ந்த திலகவதி (27) கால்வாயில் தவறி விழுந்தாா்.
உடனே, அந்தப் பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
எனினும், அங்கு அவா் கடந்த 4-ஆம் தேதி உயிரிழந்தாா். இறந்த திலகவதிக்கு 4, 6 வயதுகளில் இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், கால்வாய்க்கு மூடி போடாமல் வைத்திருந்த ஊராட்சி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினா், உறவினா்கள் ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் மனு அளித்தனா்.