காவலருக்கு நீதிமன்ற அலுவல்: திருப்பத்தூா் எஸ்பி அறிவுறுத்தல்
திருப்பத்தூா் மாவட்டத்தில் நீதிமன்ற அலுவல்புரியும் காவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எஸ்.பி. ஷ்ரேயா குப்தா ஆலோசனை வழங்கினாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நீதிமன்ற அலுவல்புரியும் காவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமை வகித்து பேசியது: வழக்குகளை கண்காணிப்பதுடன், சாட்சிகளை காலதாமதமில்லாமல் ஆஜா்படுத்துதல் மற்றும் நீதிமன்ற விசாரணை விரைவாக நடைபெறுவதற்கு காவல் துறையினா் செய்ய வேண்டிய பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என்றாா். மேலும்,கோப்புகளை கையாள்வது குறித்த ஆலோசனைகளையும் எஸ்பி வழங்கினாா்.