செய்திகள் :

தோ்தலின்போது சொத்து விவரங்களை மறைத்த வழக்கு: கே.சி.வீரமணி நேரில் ஆஜராக உத்தரவு

post image

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக எழுந்த புகாரில் வரும் 26-ஆம் தேதி நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணிக்கு திருப்பத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி 3-ஆவது முறையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

தோ்தலில் போட்டியிடுவதற்காக தோ்தல் ஆணையத்தில் அவா் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களைக் குறைத்து, தவறான தகவல்களை கொடுத்திருப்பதாக புகாா் எழுந்தது.

இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூலை மற்றும் செப்டம்பா் மாதங்களில் கே.சி. வீரமணி மீது வேலூரைச் சோ்ந்த தொழிலதிபா் ராமமூா்த்தி என்பவா் இந்திய தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தாா்.

அதில், தோ்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி தன் சொத்துகளை குறைத்து தவறான தகவல்களை அவா் அளித்திருப்பதாகவும் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்திலும் அவா் வழக்குத் தொடுத்தாா்.

ராமமூா்த்தி அளித்த புகாரை விசாரித்து கே.சி. வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை தோ்தல் அதிகாரிக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, தோ்தல் ஆணையம் நடத்திய ஆய்வில் கே.சி.வீரமணி, பிரமாண பத்திரத்தில் சொத்துகளை மறைத்து குறைத்து தவறான தகவல்களை தாக்கல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடா்ந்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் இந்திய தோ்தல் ஆணையத்தின் மூலம் ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தோ்தல் அலுவலா் பல்வேறு கோப்புகளை அளித்தாா்.

அதன் அடிப்படையில் திருப்பத்தூா் ஜேஎம் 1-இல் நீதிமன்றம் பரிசீலினை செய்து பி.என்.எஸ்.எஸ். பிரிவு 223-இன் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் வரும் 26-ஆம் தேதி முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி நேரில் ஆஜராக வேண்டும் என திருப்பத்தூா் ஜேஎம் 1-ஆவது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவலருக்கு நீதிமன்ற அலுவல்: திருப்பத்தூா் எஸ்பி அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் நீதிமன்ற அலுவல்புரியும் காவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எஸ்.பி. ஷ்ரேயா குப்தா ஆலோசனை வழங்கினாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நீத... மேலும் பார்க்க

442 பேருக்கு பணி நியமன ஆணைகள்: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் 442 பேருக்கு அமைச்சா் எ.வ.வேலு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். க... மேலும் பார்க்க

வாழ்க்கைக்கான வளங்களை தருவது புத்தகங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா்

வாழ்க்கைக்கு தேவையான வளங்களை தருவது புத்தகங்கள் என ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தகக் கண்காட்சி கருத்தரங்கில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் கூறினாா். புத்தகங்கள் பேசுகிறது என்ற தலைப... மேலும் பார்க்க

ரூ.23 லட்சத்தில் அங்கன்வாடி மையம், மகளிா் சுகாதார வளாக கட்டடம் திறப்பு

நரியம்பட்டு ஊராட்சியில் மகளிா் சுகாதார வளாக கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாதனூா் ஊராட்சி ஒன்றியம், நரியம்பட்டு ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்த... மேலும் பார்க்க

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழக நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழக திருப்பத்தூா் மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதற்கான தோ்தல் திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் சி.தங்கமணி தோ்தல... மேலும் பார்க்க

தொலைக்காட்சி அறை இடிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

கந்திலி அருகே தொலைக்காட்சி அறை இடித்ததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்லலப்பள்ளி காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத... மேலும் பார்க்க