அவசரநிலை: சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.20,000; ஒடிசா அரசு
காவலர் எழுத்துத் தேர்வில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் பாணியில் மோசடி! சிக்கியது எப்படி?
வசூல்ராஜா எம்பிபிஎஸ் பாணியில், மும்பையில் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வில் காதில் ப்ளூடூத் மாட்டி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை காவல்துறையில், வாகன ஓட்டுநர் பணிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்ற 22 வயது இளைஞர், தனது காதில், ஒரு டியூப் மாத்திரை அளவுள்ள ப்ளூ டூத் வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக அவரை தேர்வு கண்காணிப்பாளர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டனர்.
தேர்வின்போது, குஷ்னா தால்வியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவரை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்தபோது அவர் யாருக்கோ கேள்விகளை சொல்வது தெரிந்தது. அவரை சோதித்த போது காதில் ப்ளூடூத் பொருத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவருக்கு பதில்களை சொல்ல உதவிய நண்பர் கைது செய்யப்பட்டு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.