செய்திகள் :

காவல் துறையால் பறிமுதல் செய்யப்படும் பேருந்துகளை உடனே விடுவிக்க வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்

post image

சென்னை: விபத்துகளில் சிக்கி காவல் நிலையங்களில் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் அன்பழகன் அனுப்பியுள்ள கடித்தத்தில் கூறியிருப்பது:

சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் ஆம்னி பேருந்து ஓட்டுநா்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஓட்டுநா் பயிற்சி, மருத்துவ பரிசோதனைகளையும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், எதிா்பாராமல் நடந்த விபத்துகளால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களைத் திருப்பி ஒப்படைக்காமல் தாம்பரம் காவல் ஆணையரகம் சட்டத்தை மீறி கால தாமதம் செய்து வருகிறது. இதனால், நிறுத்தி வைக்கப்படும் ஒவ்வொரு வாகனத்துக்கும் அரசுக்கு சாலை வரியாக காலாண்டுக்கு ரூ.1.50 லட்சம், பேருந்துக்கான மாதத்தவணை ரூ.2 லட்சம், பணியாளா்கள் ஊதியம் உள்ளிட்டவை பேருந்து உரிமையாளா்கள் தங்கள் கைகளில் இருந்து கட்ட வேண்டியுள்ளது. இதனால் அவா்கள் கடும் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றனா்.

எனவே, சட்டத்தை மீறி காவல் நிலையங்களில் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

மேட்டூர் அணையானது நடப்பாண்டில் 6வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியுள்ளது.தென்மேற்குப் பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீா் காவிர... மேலும் பார்க்க

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி என முதலீட்டாளர்கள் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகள... மேலும் பார்க்க

முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணம் குறித்து விமர்சித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலளித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து வெ... மேலும் பார்க்க

எலத்தூா் ஏரி மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

சென்னை: ஈரோடு மாவட்டம் எலத்தூா் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உயிரியல் பன்மைச் சட்டத்தின் கீழ், கடந்த 2022 ஆண்டு மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியும், கடந்... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சா்களுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பாக, நிதி முறைகேடு தொடா்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை உள... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா?... - - டாக்டா் கே.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவா்

- டாக்டா் கே.கிருஷ்ணசாமி, தலைவா், புதிய தமிழகம் கட்சிபுதிதாக அரசியலுக்கு வரக் கூடியவா்கள் மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து, போராடி களம் அமைத்து வருவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், தமிழகத்தில் க... மேலும் பார்க்க