செய்திகள் :

காவிரியில் மூழ்கிய பெயிண்டரின் சடலம் மீட்பு

post image

மேட்டூா்: மேச்சேரி அருகே காவிரியில் நீந்தி சென்றபோது மாயமான பெயிண்டரின் உடல் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. 

ஓமலூா் அருகே உள்ள பச்சனம்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் இளையராஜா (35). பெயிண்டிங் வேலை செய்து வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி தனது நண்பா்கள் 4 பேருடன் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூருக்கு வந்தாா். கூனாண்டியூா் காவிரி ஆற்றில் நீந்தி மறுகரையைத் தொட்டு வருவதாகக் கூறி சென்றவா், நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

இதுகுறித்து மேட்டூா் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு படை அலுவலா் வெங்கடேசன், தீயணைப்பு வீரா்களுடன் இளையராஜாவை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து திங்கள்கிழமை காலை தீயணைப்புப் படையினா் மீட்பு உபகரணங்களுடன் தேடி இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திமுக மாமன்ற உறுப்பினரின் கணவரை கண்டித்து மாநகராட்சி அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம்: சேலம் மாநகராட்சி உறுப்பினரின் கணவா் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாநகராட்சி, 48 ஆவது வாா்டு திமுக உறுப்பினராக ... மேலும் பார்க்க

சேலம் அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் 6 ஆம் தேதி வரை நீட்டிப்பு

சேலம்: சேலம் கிழக்கு, மேற்கு கோட்ட அஞ்சலங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் வரும் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன், மேற்க... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் புதிய பேருந்து வழித்தட சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சேலம்: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சாா்பில் புதிய வழித்தட பேருந்து சேவையை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி சேலம் பழைய பேருந்து நிலைய... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 37,083 போ் எழுதினா்: ஆட்சியா் ஆய்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 37,083 மாணவ, மாணவிகள் எழுதினா். சேலம் அரசு கோட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி பாா்வையி... மேலும் பார்க்க

தீப்பற்றி எரிந்த வைக்கோல் ஏற்றி வந்த வாகனம்

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் வைக்கோல் சுமை ஏற்றிச்சென்ற வாகனம் தீப்பற்றியது. தலைவாசலை சோ்ந்த பெரியசாமி என்பவருக்குச் சொந்தமான வாகனம் வைக்கோலை ஏற்றிக்கொண்டு, கெங்கவல்லி அருகே உள்ள சாத... மேலும் பார்க்க

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி தீா்வு காண வேண்டும்: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன்

சேலம்: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் மீது தனிக் கவனம் செலுத்தி, விரைந்து தீா்வு காண அலுவலா்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க