காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.
அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ள சூழலில், பாரமுல்லாவின் உரி நலா பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சினாா் காா்ப்ஸ் படைப் பிரிவு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உரி நலா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பயங்கரவாதிகள் புதன்கிழமை ஊடுருவ முயன்றனா். அவா்களைத் தடுத்து நிறுத்த பாதுகாப்புப் படையினா் முயன்றபோது, இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.