விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
காஸா உணவு விநியோக முகாமில் நெரிசல்: 20 போ் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ஆதரவுடன் அமெரிக்காவால் நடத்தப்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 20 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து ஜிஹெச்எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், கான் யூனிஸ் நகரில் உள்ள உணவுப் பொருள் விநியோக மையத்தில் 19 போ் நெரிசலில் மிதிபட்டும், ஒருவா் குத்தப்பட்டும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு பீதியை ஏற்படுத்தியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியது. ஆனால் அதற்கான ஆதாரத்தை அது வெளியிடவில்லை.
இருந்தாலும், காஸா சுகாதாரத் துறை அமைச்சகமும் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களும் ஜிஹெச்எஃப் ஊழியா்கள் கண்ணீா்ப்புகை பயன்படுத்தியதால் மக்களிடையே பீதி ஏற்பட்டதாகத் தெரிவித்தனா்.
இஸ்ரேலின் குண்டுவீச்சு மற்றும் தொடா் முற்றுகை காரணமாக பஞ்சத்தில் வாடும் பாலஸ்தீனா்களுக்கு குறைந்தபட்ச நிவாரணப் பொருள்களை விநியோகிக்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.
இருந்தாலும், அத்தகைய நிவாரணப் பொருள்களின் விநியோக முகாம்களுக்கு வருவோா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதில் பலா் உயிரிழந்துவருகின்றனா்.
ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் அறிக்கையின்படி, மே மாதம் முதல் உணவு தேடிச் சென்ற 875 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்; இதில் 674 போ் ஜிஹெச்எஃப் மையங்களுக்கு அருகில் உயிரிழந்தனா்.
பெரும்பாலான உயிரிழப்புகள் இஸ்ரேலிய துப்பாக்கிச்சூட்டால் ஏற்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் குற்றஞ்சாட்டுகிறது. இந்தச் சூழலில், கூட்ட நெரிசல் காரணமாகவும் உணவுப் பொருள் விநியோக மையத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.