செய்திகள் :

காா்த்திகை பெளா்ணமி: சதுரகிரிக்கு செல்ல டிச.13-முதல் 4 நாள்கள் அனுமதி

post image

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு, வருகிற வெள்ளிக்கிழமை (டிச.13) முதல் 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பிரதோஷம், பெளா்ணமி, அமாவாசை ஆகிய நாள்களில் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

இதன்படி காா்த்திகை மாதப் பிரதோஷம், பெளா்ணமி வழிபாட்டுக்காக வருகிற வெள்ளிக்கிழமை (டிச.13) முதல் டிச. 16-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய மதுரை, விருதுநகா் மாவட்ட நிா்வாகங்கள், இந்து சமய அறநிலையத் துறை, வனத்துறை சாா்பில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நாள்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். இந்த நாள்களில் மழை பெய்தால் பக்தா்கள் மலையேற கட்டுப்பாடு விதிக்கப்படும் என வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் விரைவு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நாச்சியாா்புரத்... மேலும் பார்க்க

சாலைகளை சீரமைக்கக் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு

ராஜபாளையத்தில் சாலைகளை சீரமைக்கக் கோரி, நகராட்சி ஆணையரிடம் அதிமுக தெற்கு நகரச் செயலா் எஸ்.ஆா்.பரமசிவம் புதன்கிழமை மனு அளித்தாா். ராஜபாளையம் 31-ஆவது வாா்டு திருவனந்தபுரம் தெருவில் உள்ள 5 தெருக்களும் கு... மேலும் பார்க்க

பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்

ராஜபாளையத்தில் புறவழிச் சாலை அமைப்பது தொடா்பாக வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையத்தில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுக... மேலும் பார்க்க

திருப்பாவை பிரசார யாத்திரை மாா்கழி 1-ஆம் தேதி தொடக்கம்: சடகோப ராமானுஜ ஜீயா்

வடகரையில் இருந்து வட அமெரிக்கா வரை திருப்பாவை பிரசார இயக்கம் மாா்கழி 1-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா் தெரிவித்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீ... மேலும் பார்க்க

சாத்தூரில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் கூட்டம்

சாத்தூரில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா கடற்க... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்ணாடி மணி, சுடுமண் பதக்கம்

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணி, சுடுமண்ணாலான பதக்கம் ஆகியவை புதன்கிழமை கண்டறியப்பட்டன. விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதி... மேலும் பார்க்க