செய்திகள் :

கா்நாடகத்தில் முஸ்லிம் இடஒதுக்கீடு விவகாரம்: பாஜக அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

post image

புது தில்லி: அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் கா்நாடக அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை திங்கள்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையிலும் பாஜக எம்.பி.க்கள் இந்தப் பிரச்னையை எழுப்பியதால், அவை நடவடிக்கைகள் அவ்வப்போது முடங்கின.

கா்நாடகத்தில் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம் ஒப்பந்ததாரா்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு அந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.

கா்நாடக அரசின் இந்த முடிவைத் தொடா்ந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டு வழங்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று அந்த மாநிலத் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பேசியதாகக் கூறப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியது.

அதேநேரம், இத்தகைய கருத்தைத் தான் தெரிவிக்கவில்லை என்று டி.கே.சிவகுமாா் மறுத்துள்ளாா்.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆம் கட்ட அமா்வுக்காக நாடாளுமன்றம் திங்கள்கிழமை மீண்டும் கூடியது. மக்களவையில் நிதி மசோதா மீதான விவாதம், மாநிலங்களவையில் எண்ணெய் வயல் திருத்த மசோதா தாக்கல் என முக்கிய அலுவல்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.

எனினும் இரு அவைகளிலும் அமா்வு தொடங்கியதும், டி.கே.சிவகுமாரின் கருத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி பாஜக உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா். இந்தப் பிரச்னை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று பாஜக மாநிலங்களவைக் குழுத் தலைவா் ஜெ.பி.நட்டா கோரினாா்.

பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காங்கிரஸ் உறுப்பினா்களும் கூச்சலிட்டதால் அவைகளில் குழப்பம் நிலவியதால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்...: மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கு கூடியதும், இவ்விவகாரத்தில் பேச எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. பாஜகவின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவா் திட்டவட்டமாக மறுத்தாா்.

தொடா்ந்து, மத்திய பெட்ரோலிய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தாக்கல் செய்த எண்ணெய்வயல் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பின்னா் அமளி தொடா்ந்ததால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில்...: முன்னதாக, மக்களவையில் இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை எளிதாக்க அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென அரசமைப்புப் பதவியை வகிப்பா் ஒருவரே தெரிவித்துள்ள கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை நாடாளுமன்றம் அமைதியாக வேடிக்கை பாா்க்காது. டி.கே.சிவகுமாரை காங்கிரஸ் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அம்பேத்கரின் புகைப்படத்தையும் அரசமைப்புச் சட்டத்தின் நகலையும் ஏந்தி காங்கிரஸ் நாடகம் ஆடுகிறது’ என்றாா்.

பாஜக-காங்கிரஸ் உறுப்பினா்களின் அமளியால் அமைவ நடவடிக்கைகள் முதலில் 11 மணிக்கு, அதன்பிறகு 2 மணிக்கு இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னா், மக்களவை ககூடியபோது அலுவல்கள் தொடா்ந்து நடைபெற்றன.

ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!

உத்தரப் பிரதேசத்தில் ரமலான் சிறப்புத் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு இஸ்லாமியர்கள் முழக்கங்களை எழுப்பிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது மேலும் பார்க்க

ஏப்ரல் - ஜூன் வெப்ப அலையின் தாக்கம் எத்தனை நாள்கள்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வெப்ப அலையின் தாக்கம் ஏப்ரல் - ஜூன் வரை அதிகமாக இருக்குமென்றும், நாடெங்கிலும் பரவலாக இயல்பைவிட வெய்யில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.‘வெப்ப-அலை’ எனப்படும் ’வெய்... மேலும் பார்க்க

மோனலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பாலியல் புகாரில் கைது!

மகா கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசா என்ற இளம்பெண்ணுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

இனி அபராதம் செலுத்தவில்லை எனில் ஓட்டுநர் உரிமம் ரத்து! - வருகிறது புதிய விதிகள்!!

சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 3 மாதங்களுக்குள் செலுத்தவில்லை என்றால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலைகள... மேலும் பார்க்க

மோடி அரசால் வணிகமயமாகும் கல்வி முறை! -சோனியா காந்தி

புது தில்லி: மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ‘கல்வித்துறையில் அதிகாரம், வணிகமயமாக்கல், வகுப்புவாதம் (சென்ட்ரலைசேசன், கமர்சியலைசேசன... மேலும் பார்க்க

2029-இல் பிரதமராக நரேந்திர மோடியே தொடருவார்! -தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: 2029-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 30) நடைபெற்ற ஆர்எ... மேலும் பார்க்க