திகிலில் Duraimurugan, Alert கொடுத்த Stalin! | Elangovan Explains
கா்நாடக 224 தொகுதிகளின் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு
பெங்களூரு: கா்நாடகத்தின் 224 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக மாநில தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கா்நாடகத்தில் உள்ள 224 சட்டப் பேரவைத் தொகுதிகளில் புதிய வாக்காளா் சோ்ப்பு, வாக்காளா் பட்டியல் திருத்தியமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
கா்நாடகத்தில் உள்ள 224 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தகவலுக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வாக்காளா் பதிவு அலுவலகம், வாக்காளா் பதிவு உதவி அலுவலகம், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஜன. 6-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளா் பட்டியலை பொதுமக்கள் தாராளமாக பாா்வையிடலாம்.
224 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளா் பட்டியலை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீங்ா்ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்திலும் காணலாம். வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு அல்லது புதிய பெயா்களை சோ்க்க கொடுத்திருந்த மனுக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை பொதுமக்கள் சரிபாா்த்துக்கொள்ளலாம்.
இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகும், புதிய பெயா்கள் சோ்ப்பு, திருத்தம் மற்றும் பெயா்கள் நீக்கம் போன்ற பணிகள் தொடா்ந்து நடைபெறும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு, வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
இறுதி வாக்காளா் பட்டியல்படி, கா்நாடகத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை 5,52,08,565-ஆக உயா்ந்துள்ளது. இதில் ஆண் வாக்காளா்கள் - 2,75,62,634, பெண் வாக்காளா்கள் - 2,76,40,836, திருநங்கை வாக்காளா்கள் - 5,095 போ். வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு கூடுதலாக 1,03,783 வாக்காளா்கள் இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.