7 மாதங்களாக வலியுடனே விளையாடினேன்..! நடுவரைத் தாக்கிய ரியல் மாட்ரிட் வீரருக்கு அ...
கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி: இந்திய குடிமைப்பணித் தேர்வின் வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா!
இந்திய அரசின் உயர்நிலைப் பணிகளான இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய்ப்பணி (IAS, IPS, IRS) உள்ளிட்ட 21 இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பொதுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலம் நடத்தப்பெறுகிறது. இத்தேர்வின் 2024 ஆம் ஆண்டிற்கான முடிவுகள் ஏப்ரல் 22 அன்று (22.04.25) UPSC நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இதில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் மாணவர்கள் 138 பேர் வெற்றி பெற்று சாதனைப் படைத்திருந்தனர். இவர்களுக்கான பாராட்டு விழா சென்னை தி.நகர், G.N செட்டி ரோட்டில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது.
வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா!
நடப்பு ஆண்டு குடிமைப்பணி தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்ற கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் மாணவர்களான, இந்திய அளவில் முறையே 125 ஆம் இடம் பெற்ற S. சரண்யா, 784 ஆம் இடம் பெற்ற ஹரிகிருஷ்ணன் K, 259 ஆம் இடம் பெற்ற தணிகையரசன் T , 298 ஆம் இடம் பெற்ற S சாய் கிரண், 546 ஆம் இடம் பெற்ற கவின் மொழி M V, 639 ஆம் இடம் பெற்ற அருண் பிரகாஷ் M, 691ஆம் இடம் பெற்ற கரண் அய்யப்பா, 862 ஆம் இடம் பெற்ற கிரண் P மற்றும் TNPSC குரூப் 1 தேர்வில் 21-ம் இடம் பெற்ற கீர்த்திகா ஆகியோர்களை கௌவரவிக்கும் விதமாக சென்னை தி.நகர், G.N செட்டி ரோட்டில் உள்ள வாணி மஹாலில் ஏப்ரல் 27 ஆம் தேதி (27.04.2025) ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழாவும் அதனைத் தொடர்ந்து நினைப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் முதன்மை செயலாளர் திரு. ஜவஹர் ஐ.ஏ.எஸ் (பணி நிறைவு), முன்னாள் செயலாளர் திரு. விவேக் ஹரிநாராயன் ஐ.ஏ.எஸ் (பணி நிறைவு), முன்னாள் மத்திய சுங்க மற்றும் கலால் கூடுதல் ஆணையர் திரு. தமிழ் வேந்தன் ஐ.ஆர்.எஸ் (பணி நிறைவு), முன்னாள் முதன்மை செயலாளர் கேப்டன்.சிவசைலம் ஐ.ஏ.எஸ் (பணி நிறைவு), திரு. G.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் (பணி நிறைவு), அர்ச்சனா ராமசுந்தரம் ஐ.பி.எஸ் (பணி நிறைவு), திரு. அருண் IPoS, திரு. நந்தகுமார் ஐ.ஆர்.எஸ், டாக்டர். P.விஜயகுமார் ஐ.பி.எஸ் மற்றும் M. ராஜ்குமார் ஐ.எப்.எஸ்ஆகியோர் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந்திய குடிமைப்பணி சம்பந்தமான அறிவுரைகளையும், நினைவுப்பரிசினையும் வழங்கி கௌரவித்தனர்.
கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாதெமியின் நிர்வாக இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் சிறப்பு உரை நிகழ்த்தினார்.
மேலும் இது போன்ற மாணவர்களின் கனவினை மெய்ப்பட வைக்கும் களமாக விளங்கிகொண்டிருக்கும் நமது கிங்மேக்கேர்ஸ் IAS அகாடமி இந்தாண்டிற்கான பயிற்சி வகுப்புகள் வரும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்க உள்ளன. இதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமல்லாமல் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என கிங்மேக்கேர்ஸ் ஐஏஎஸ் அகாடெமியின் நிர்வாக இயக்குனர் திரு.சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தார்.