செய்திகள் :

தொடரும் வேலைவாய்ப்பின்மை; பாய்ச்சல் காட்டும் ஏ.ஐ - இனி என்ன படிக்கலாம்?!

post image

மத்தியிலோ மாநிலத்திலோ எந்த ஆட்சி வந்தாலும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பேசுவதற்கும், அதற்கான தீர்வை முன்வைப்போம் என்ற வாக்குறுதி அளிப்பதற்கும் தவறியதே கிடையாது. பிரதமர் மோடியின் அதிமுக்கிய வாக்குறுதிகளின் பட்டியலில் இந்த வேலையில்லா திண்டாட்டப் பிரச்னையும் இருந்தது.

வேலை இழப்பு ( மாதிரி படம்)

2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒருவாரமே இருந்த நிலையில், டெல்லியில் பொதுகூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ``மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, நலத்திட்டங்களை விரிவுபடுத்துவது இதுதான் என் தலையாயப் பணியாக இருக்கும். தேர்தல் முடிவுகள் வெளியான உடனே இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்" என்றார்.

ஆனால், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) என்ற அமைப்பு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மையைத் தொடர்ந்து கண்காணித்து, தரவுகளை வழங்கிவருகிறது. அந்தத் தரவுகளின்படி டிசம்பர் 2024-ல் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8.65 சதவீதமாகவும், கிராமப்புற வேலையின்மை 7.97 சதவீதமாகவும், நகர்ப்புற வேலையின்மை 10.08 சதவீதமாகவும் இருப்பதாகக் காட்டுகிறது.

வேலைவாய்ப்பு

நெருக்கடி

சமீபத்தில் Unstop அமைப்பின் அறிக்கையின்படி, 83 சதவிகித பொறியியல் மாணவர்களும், கிட்டத்தட்ட பாதி எம்.பி.ஏ மாணவர்களும் 2024-ம் ஆண்டில் எந்த வேலையும் அல்லது இன்டர்ன்ஷிப் சலுகைகளும் இல்லாமலேயே கல்லூரியிலிருந்து வெளியாகியிருக்கின்றனர். இந்த புள்ளிவிவரம், இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் கல்விப் பிரிவுகளில் புதிய பட்டதாரிகளிடையே வளர்ந்து வரும் வேலைவாய்ப்பு நெருக்கடியை குறிக்கிறது.

இன்டர்ன்ஷிப்

வேலைவாய்ப்பின்மை நெருக்கடியால் ஊதியம் பெறாத இன்டர்ன்ஷிப்கள் அதிகரித்து வருகிறது. ஊதியமில்லாமல் இன்டர்ன்ஷிப் செய்துவரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. Unstop ஆய்வின்படி 2023-ம் ஆண்டில் 8 மாணவர்களில் ஒருவர் ஊதியம் இல்லாத இன்டர்ன்ஷிஃப் செய்துவந்த நிலையில், 2024-ம் ஆண்டில், 4 மாணவர்களில் ஒருவர் ஊதியம் பெறாத இன்டர்ன்ஷிப்பை செய்துவருகிறார். தொழில்துறை அனுபவத்தைப் பெற மாணவர்கள் ஊதியம் இல்லாமல்கூட வேலை செய்யுமளவில் தயாராக இருப்பதை இது குறிக்கிறது.

கம்ப்யூட்டர்

இன்ஜினியரிங், எம்.பி.ஏ என்பதெல்லாம் ஒருகாலத்தில் பெருமைக்குரிய படிப்புகளாகவும், சமூகத்தில் ஸ்டேடஸை அடையாளப்படுத்தும் படிப்பாகவும் கருதப்பட்டது. ஆனால், இப்போது அந்தப் படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. மற்றொருபுறம், AI தொழிற்நுட்பம் வந்துவிட்டதால் வேலை இழப்பு தொடர்கிறது என்றக் குற்றச்சாட்டுகளும் எழுகிறது.

கம்ப்யூட்டர் பிரபலமடையத் தொடங்கியபோதும் இதேப் போன்ற அச்சங்கள் எழுந்தது. அப்போது வேலையில் இருந்த பலருக்கும் வேலை இழப்பும் ஏற்பட்டது. அதே நேரம், அடுத்தத் தலைமுறையினருக்கு கம்ப்யூட்டர்தான் வேலைக்கான அடிப்படை என மாறியிருக்கிறது. அதேப் போன்ற கோணத்தில் இந்த AI தொழிற்நுட்ப அச்சத்தையும் அணுகலாம்.

AI

எனவே வரும் காலத்தில் இந்த AI தொழிற்நுட்பம் எவ்வளவு வேலை இழப்பை ஏற்படுத்துகிறதோ அதைவிடப் பலமடங்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கும் என கல்வியாளர்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர். அதன் அடிப்படையில் 2025-ல் இளைஞர்கள் தேர்வு செய்ய வேண்டிய முக்கிய துறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

தொழில்நுட்பத் துறைகள் (Technology Sectors)

  • Data Science

  • Artificial Intelligence

  • Cybersecurity

  • Software Development

  • Robotics

பசுமை தொழில்கள் (Green Jobs)

  • Renewable Energy (Solar/Wind)

  • Environmental Engineering

  • Sustainable Architecture

Chat GPT vs Meta AI

உயிரியல் மற்றும் சுகாதாரத் துறைகள் (Bio & Health)

  • Biotechnology

  • Public Health

  • Digital Health / Telemedicine

நிதி மற்றும் கணக்கியல் துறைகள் (Finance & Analytics)

  • Financial Technology (FinTech)

  • Chartered Accountancy

  • Investment Banking

  • Blockchain Applications

கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு

  • Smart City Design

  • 3D Architecture

  • Infrastructure Management

சுற்றுலா மற்றும் ஹோட்டல் நிர்வாகம்

  • Heritage-based Tourism

  • Eco-tourism

  • Hospitality Management

கல்வி

நவீன வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு

  • Agritech

  • Hydroponics & Urban Farming

  • Organic Certification & Marketing

மீடியா, டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் உள்ளடக்கம்

  • Content Creation

  • Journalism & Political Analysis

  • Social Media Management

இவை உதாரணங்களாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோல ஏராளமான வருங்காலத்துக்கு ஏற்றப் படிப்புகள் இருக்கிறது. உங்கள் ஆர்வத்துக்கு, பொருளாதாரத்துக்கு ஏற்றப் படிப்புகளை தேர்வு செய்து அதில் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்வது நல்லது என்கின்றனர் கல்வியிலளர்கள்.

விரிவான அலசல்: கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் ஏன்? - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு

விடுதலை இந்தியாவின் அரசு எவ்வாறு அமைய வேண்டும் என்று விவாதித்து முடிவு மேற்கொண்ட இந்திய அரசு அமைப்பு நிர்ணய சபை (Constituent Assembly), பல்வேறு மொழிவாரி தேசிய இனங்களைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தின்... மேலும் பார்க்க

PMIS: மாணவர்களுக்கு மாதம் ரூ.5000; மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு திறனை வளர்த்துக்கொள்ளவும், தங்களைத் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப தயார்ப்படுத்திக் கொள்ளவும் உதவும் வகையில் கடந்த 2024ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்... மேலும் பார்க்க

கட்டணமில்லாமல் வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வது எப்படி? - மாணவர்களுக்குக் கல்வியாளரின் டிப்ஸ்!

தேர்வுகளெல்லாம் முடிந்து கோடை விடுமுறை தொடங்கவிருக்கிறது. கோடை விடுமுறையில் தங்களின் பிள்ளைகள் பயனுள்ள வகையில் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் எனப் பெற்றோர்கள் விரும்புவார்கள்.அந்தவகையில், தங்களின் பிள... மேலும் பார்க்க