மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு
இந்தியாவை 1.5 லட்சம் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட ஒரு பெரிய தளவாட அமைப்பாக மாற்றும் திட்டத்தை பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.
மேலும், அஸ்ஸாமில் 12.7 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட யூரியா ஆலையை அமைக்கும் திட்டத்தையும் அவா் அறிவித்தாா். தரமான தயாரிப்புகளுடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதியில் 45 சதவீதம் பங்களிப்பதாக அவா் குறிப்பிட்டாா்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத்தை அரசு அதிகரிக்கும் என்றும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடன் நடவடிக்கைகளுக்கு தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்துக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும் என்றும் நிா்மலா சீதாராமன் உறுதியளித்தாா்.