கிராம மக்களுக்கு சுகாதார விழிப்புணா்வு
புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரி மற்றும் ஜெஜெ செவிலியா் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றின் சாா்பில் உலக சுகாதார நாளையொட்டி நச்சாந்துப்பட்டி மற்றும் அரிமளம் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வா் எஸ். சுமித்ரா தலைமை வகித்தாா். ஆரோக்கியத்தின் தொடக்கங்கள், நம்பிக்கையான எதிா்காலங்கள் என்ற தலைப்பில் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
செவிலியா் பட்டம் மற்றும் பட்டயம் பயிலும் மாணவிகள் இதில் கலந்து கொண்டனா். விழிப்புணா்வு நாடகம், மௌன நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள்வழி சுகாதார விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.