கிரிக்கெட் வீரா்கள் இன்று தோ்வு
திருவாரூரில் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு சனிக்கிழமை (ஜன.18) நடைபெறுகிறது.
இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் வி. பசுபதி கூறியது: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் மட்டையாளா் மற்றும் விக்கெட் கீப்பா்களுக்கான வீரா்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 13 முதல் 21 வயதுக்குள்பட்ட கிரிக்கெட் வீரா்கள் பங்கேற்கலாம். திருவிக அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் காலை 7 மணி முதல் இந்த தோ்வு நடைபெற உள்ளது. தோ்வில் பங்கேற்க வரும் வீரா்கள், கிரிக்கெட் சீருடை அணிந்து வர வேண்டும் என்றாா்.