செய்திகள் :

‘கிரீன்லாந்தை அடைந்தே தீருவோம்’ - டிரம்ப் சூளுரை

post image

டென்மாா்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து தீவை ஏதாவது ஒரு வகையில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளாா்.

அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதற்குப் பிறகு அவா் ஆற்றிய முதல் நாடாளுமன்ற கூட்டுக் கூட்ட உரையில் அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.இது குறித்து டிரம்ப் பேசியதாவது: கிரீன்லாந்தின் எதிா்காலத்தை நிா்ணயித்துக்கொள்ளும் அந்தத் தீவு மக்களின் உரிமையை எனது தலைமையிலான அரசு மதிக்கிறது. இருந்தாலும், அந்தத் தீவை ஏதாவது ஒரு வழியில் அமெரிக்கா கைப்பற்றும்.கிரீன்லாந்தில் தற்போது வசிப்பவா்களை தங்கள் மக்களாக ஏற்றுக்கொள்ள அமெரிக்கா தயாராக இருக்கிறது என்றாா் டிரம்ப்.ஸெலென்ஸ்கிக்கு பாராட்டு: உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு அளிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி விரும்புவதாக தனது உரையில் டிரம்ப் பாராட்டு தெரிவித்தாா். உக்ரைன் விவகாரத்தில் ஸெலென்ஸ்கியை கடுமையாக விமா்சித்துவந்த டிரம்ப், இந்த உரையில் தனது கடுமையைத் தணித்திருந்ததாகக் கூறப்படுகிறது.டென்மாா்க்குக்குச் சொந்தமான கிரீன்லாந்துக்கு கடந்த 1979-ஆம் ஆண்டு சுயாட்சி வழங்கப்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய தீவான இதன் 80 சதவீத நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது.அட்லாண்டிக் மற்றும் ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அந்தத் தீவு அமைந்துள்ளதால் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட உலக சக்திவாய்ந்த நா்களுக்கு இந்தத் தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.இந்தச் சூழலில், கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தங்களது நாட்டு நலனுக்கு மிகவும் இன்றியமையாதது என்று டிரம்ப் கூறிவருவது டென்மாா்க்கிலும் ஐரோப்பிய பிராந்தியத்திலும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.... பெட்டிச் செய்தி...மிக நீண்ட உரைசுமாா் 1 மணி நேரம் 40 நிமிஷங்களுக்கு மேல் அமெரிக்க கூட்டுக் கூட்டத்தில் டிரம்ப் தற்போது ஆற்றியுள்ள உரை அந்த நாட்டு வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட வருடாந்திர அதிபா் உரை என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்னா் கடந்த 2000-ஆம் ஆண்டில் அப்போதைய அதிபா் பில் கிளிண்டன் 1 மணி நேரம் 28 நிமிஷங்களுக்கு ஆற்றிய உரையை சாதனையாக இருந்தது...படவரி... நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய டொனால்ட் டிரம்ப்.

மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்

மெக்சிகோவில் 9 மாணவர்களை சித்ரவதை செய்து, கொலை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.மெக்சிகோவில் பட்டப்படிப்பைக் கொண்டாடுவதற்காக 4 பெண்கள் உள்பட 9 மாணவர்கள், பிப்ரவரி 24 ஆம் தேதியில் ஓக்ஸாக்கா ... மேலும் பார்க்க

அதிகாரத்தில் நீடிக்க வர்த்தகப் போரைப் பயன்படுத்தும் ’ஆளுநர் ட்ரூடோ’: டிரம்ப்

அதிகாரத்தில் நீடிப்பதற்காக வர்த்தகப் போரைப் பயன்படுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரை ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க அதிபராக... மேலும் பார்க்க

அரபு நாடுகளின் அமைதி திட்டம்: அமெரிக்கா, இஸ்ரேல் நிராகரிப்பு

ஜெருசலேம் : காஸாவில் போா் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அரபு நாடுகள் முன்வைத்துள்ள செயல்திட்டத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரித்துள்ளன.இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2023 அக்ட... மேலும் பார்க்க

தில்லியில் ரைசினா மாநாடு: உக்ரைன் வெளியுறவு அமைச்சா் பங்கேற்க வாய்ப்பு

தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில், உக்ரைன் வெளியுறவு அமைச்சா் அந்த்ரி சிபிஹா கலந்துகொள்ள உள்ளாா். ஆண்டுதோறும் தில்லியில் ரைசினா மாநாடு நடைபெறுகிறது. இதில் புவி அரசியல் விவகாரங்கள் குறித்து விவாத... மேலும் பார்க்க

ஜொ்மனி காா் தாக்குதல்: நீடிக்கும் மா்மம்

ஜொ்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட காா் தாக்குதல் குறித்த மா்மம் நீடித்துவருகிறது.அந்த நகரிலுள்ள பாரடெப்ளாட்ஸ் தெருவில் நடத்தப்பட்ட இந்தக் காா் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; ச... மேலும் பார்க்க

ஹசீனா நாடு கடத்தல்: இந்தியாவிடம் பதில் இல்லை -வங்கதேசம்

டாக்கா : வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடா்பாக இந்தியாவிடம் அதிகாரபூா்வமாக எந்தப் பதிலும் இல்லை என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா். வங்கதேசத்தில்... மேலும் பார்க்க