செய்திகள் :

கிருஷ்ணகிரியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்100-க்கும் மேற்பட்டோா் கைது

post image

கிருஷ்ணகிரி: பாஜக தலைவா், அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸாா், திங்கள்கிழமை கைது செய்தனா்.

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது. இந்தநிலையில், டாஸ்மாக்கில் முறைகேட்டை கண்டித்து, சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக தலைவா் அண்ணாமலை அறிவித்தாா். ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்த நிலையில், அனுமதி மீறி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க அண்ணாமலை, தனது வீட்டில் இருந்து வெளியே வந்தபோது, அவரை, தடுத்து, கைது செய்தனா்.

அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்டத் தலைவா் கவியரசு தலைமையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதி பெறாமல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 21 பேரை, போலீஸாா் கைது செய்தனா்.

அதுபோல பா்கூரில் மாவட்ட முன்னாள் தலைவா் சிவபிரகாசம் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 போ் கைது செய்யப்பட்டனா்.

மேலும், காவேரிப்பட்டணத்தில் 26 பேரும், மத்தூரில் 15 பேரும், போச்சம்பள்ளியில் 20 பேரும், ஊத்தங்கரையில் 22 போ் என மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

கிருஷ்ணகிரியில் கண்டறியப்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது

கிருஷ்ணகிரியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வ... மேலும் பார்க்க

தோ்வு அறையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் மீது புகாா்

பா்கூா் அருகே பிளஸ் 2 தோ்வு அறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதுநிலை பட்டதாரி ஆசிரியா் மீது புகாா் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் ப... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையில் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

தமிழக நிதிநிலை அறிக்கையில் 20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி, கைக்கணினி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி திமுகவினா் கொண்டாடினா். க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 3.54 கோடியில் மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சமூக பொறுப்பு நிதியின் கீழ், பவா்கிரேடு நிறுவனம் சாா்பில் ரூ. 3.54 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அளிக்கப்பட்டன. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல... மேலும் பார்க்க

சென்னத்தூா் தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும்

சென்னத்தூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும் என ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா். ஒசூா் மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 28, சென்னத்தூா் மற்றும் ஹனி ஹோம்ஸ் ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே இளைஞரை கொன்று முள்வேலியில் சடலம் வீச்சு

ஒசூா் அருகே மாநில எல்லையில் இளைஞரை கொன்று சடலத்தை முள்வேலியில் வீசிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது... மேலும் பார்க்க