கிருஷ்ணகிரியில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்
வன்னியா்களுக்கு 10.5 சத இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாவட்டச் செயலாளா் மோகன்ராம் தலைமை வகித்தாா். பாமக மாவட்ட முன்னாள் செயலாளா் இளங்கோ, வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
வன்னியா்களுக்கு 10.5 சத இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை 1000 நாள்கள் கடந்தும், நடைமுறைப்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும், உடனே, வன்னியருக்கு 10.5 சத இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.