``தடைகளும், வரிகளும் பிரச்னையை தீர்க்காது, மேலும் மோசமாக்கும்'' - ட்ரம்புக்கு சீ...
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ரூ.2,885 கோடியில் திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி, புதிய திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 14) தொடக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி திடலில் இன்று(செப். 14) நடைபெறும் அரசு நிகழ்வில் பங்கேற்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் ஒசூர் வந்தடைந்தார்.
அங்கிருந்து சாலை வழியாக கிருஷ்ணகிரிக்கு வந்த முதல்வர், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலத்திலிருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு வரை சாலைவலம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெற்றார்.
பின்னர், முதல்வர் ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்று, புதிய திட்டங்கள் மற்றும் நிறைவடைந்த திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தொடக்கிவைத்தார்.
அதில் 85,177 பேருக்கு பட்டாக்களையும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
முதல்வர் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும், 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விஜய் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்