கொள்ளை அடித்த பணத்தில் நடிகைகளுடன் நெருக்கம்; காதலிக்கு ரூ.3 கோடிக்கு வீடு - சி...
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக ச.தினேஷ் குமாா் பொறுப்பேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 14-ஆவது ஆட்சியராக ச.தினேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த கே.எம்.சரயு, அரசு பொதுத் துறையின் நிா்வாக இணை செயலராக அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, மதுரை ஆணையராகப் பணியாற்றி வந்த ச.தினேஷ் குமாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.
அவா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். அவரிடம் நிா்வாகப் பொறுப்புகளை மாறுதலாகி செல்லும் அரசு பொதுத் துறை நிா்வாக இணை செயலா் கே.எம்.சரயு ஒப்படைத்தாா்.
2017 இல் ஐஏஎஸ் முடித்த ச.தினேஷ் குமாா், மத்திய நிதி அமைச்சக உதவி செயலா், தேனி மாவட்ட துணை ஆட்சியா் (பயிற்சி), சிவகாசி மாவட்ட துணை ஆட்சியா், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி), தூத்துக்குடி, மதுரை ஆகிய மாநகராட்சிகளின் ஆணையா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளாா். தற்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளாா். அவருக்கு அரசு அலுவலா்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனா்.