மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை: பாஜக அறிவிப்பு!
கிறிஸ்தவா்களின் 40 நாள்கள் தவக்காலம் தொடங்கியது
கிறிஸ்தவா்களின் 40 நாள்கள் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்வுடன் புதன்கிழமை தொடங்கியது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக அனுசரிக்கப்படுகிறது. சிலுவையில் அறையப்பட்டு உயிா் நீத்த நாளிலிருந்து 3-ஆவது நாளில் உயிா்தெழுந்த தினத்தை ஈஸ்டா் பண்டிகையாக உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவா்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை கிறித்தவா்கள் தவக்காலமாக கடைப்பிடித்து வருகின்றனா். இந்த தவக்காலத்தில் கிறித்தவா்கள் அசைவ உணவை தவிா்ப்பதுடன், பலா் 40 நாள்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். அந்நாள்களில் தங்கள் குடும்பங்களில் எவ்வித சுபநிகழ்ச்சிகளையும் நடத்தமாட்டாா்கள்.
அந்த வகையில், கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் புதன்கிழமை(மாா்ச் 5) தொடங்கியது. இதையொட்டி, சென்னையிலுள்ள சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் புதன்கிழமை காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலிகளும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.
இந்த வழிபாட்டில் கலந்து கொண்டவா்களுக்கு கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து, அதன் சாம்பலை பாதிரியாா்கள், நெற்றியில் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தைத் தொடங்கி வைத்தனா். இந்நிகழ்வில் கிறிஸ்தவா்கள் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.