கிறிஸ்துமஸ்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
இதையும் படிக்க |கிறிஸ்துமஸ்: ஆளுநா்கள், முதல்வா், தலைவா்கள் வாழ்த்து
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் ஆகியை நிலைத்திருக்கட்டும்.
அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.