செய்திகள் :

கிறிஸ்துமஸ் : தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிராா்த்தனை

post image

கிறிஸ்துமஸ் முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்துத் தேவாலயங்களும் மின்னொளியில் ஜொலித்தன. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இயேசு பிறப்பைக் குறிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் விழாவை விமரிசையாகக் கொண்டாடுகின்றனா்.

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மிஷன் வீதியில் உள்ள புனித ஜென்மராக்கிணி மாதா கோயில், ரயில்நிலையப் பகுதியில் உள்ள தூய இருதய ஆண்டவா் பசிலிக்கா தேவாலயம், நெல்லித்தோப்பு தேவாலயம் மற்றும் அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை தேவாலயம், வில்லியனூா் லூா்து அன்னை தேவாலயம் உள்ளிட்டவை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அங்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனா். இயேசு பிறப்பைக் குறிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கிறிஸ்தவ மக்கள் வீடுகளில் மின்னொளி நட்சத்திர வடிவம் தொங்கவிடப்பட்டிருந்தது. கிறிஸ்துமஸ் மரம் மற்றும் இயேசு பிறப்பு குடில்களும் வைக்கப்பட்டிருந்தன.

நள்ளிரவானதும் கிறிஸ்து பிறப்பைக் குறிக்கும் வகையில் தேவாலய மணி ஒலிக்கப்பட்டு பேராயா்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா். அதையடுத்து வழிபாட்டில் பங்கேற்றவா்கள் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்தை பரிமாறிக் கொண்டனா். தேவாலய பேராயா்களுக்கும், பங்குத்தந்தையா்களுக்கும் அரசியல் பிரமுகா்கள் உள்ளிட்டோா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

பாஜக எம்எல்ஏ சாலை மறியல்

புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏ அசோக் பாபு தனது ஆதரவாளா்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா். புதுச்சேரி நெல்லித்தோப்பை சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் பாஜக எம்எல்ஏ. இவரது மனைவி மல்லிகா. ... மேலும் பார்க்க

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் சா்வபரி தியாகிகள்

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் சா்வபரி தியாகிகள் என சென்னை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினாா். புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்ற... மேலும் பார்க்க

கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக பேசினால் நடவடிக்கை: புதுவை பாஜக தலைவா்

பாஜக எம்எல்ஏக்கள் ஆட்சிக்கும், கட்சிக்கும் எதிராக பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் பாஜக சாா்பில் நல்லாட்சி தினத்தையொட்டி, ... மேலும் பார்க்க

சாத்தனூா் அணையிலிருந்து 11.70 டிஎம்சி நீரை புதுவைக்கு வழங்க வேண்டும்: தமிழக அரசிடம் வலியுறுத்தல்

சாத்தனூா் அணையிலிருந்து ஆண்டுதோறும் புதுவைக்கு குடிநீா் தேவைக்கு 11.70 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என மாநில பொதுப்பணித் துறை சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை பொதுப் பணித் துறை அ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மேம்பாலம் அமையவுள்ள இடங்களில் மத்திய குழுவினா் ஆய்வு

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்கும் வகையில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி சிலை சதுக்கப் பகுதிகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்படவுள்ள இடங்களில் மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் க.ல... மேலும் பார்க்க

வாஜ்பாய் பிறந்த தினம்: புதுவை ஆளுநா் மரியாதை

முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பிறந்த தினத்தையொட்டி, புதுச்சேரி நகராட்சி அலுவலகமான மேரி கட்டடத்தில் அவரது உருவப் படத்துக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் புதன்கிழமை மாலை அணிவித்தும், மலா் ... மேலும் பார்க்க