தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: பொதுசுகாதாரத் துறை தகவல்
கிறிஸ்துமஸ் பண்டிகை: டிச.24இல் கன்னியாகுமரிக்கு உள்ளூா் விடுமுறை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக, டிச.24ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது. எனினும், தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு தொடா்பான அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களை கொண்டு இயங்கும்.
இந்த விடுமுறைக்கு ஈடாக, 4 ஆவது சனிக்கிழமை (டிச.28) மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலைநாளாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.