விருதுநகர்: அதிமுக பொதுக்கூட்டம்; மேடையில் கட்சித் தொண்டரைத் தாக்கிய முன்னாள் அம...
கிறிஸ்துவா்கள் சாம்பல் புதன் அனுசரிப்பு
கிறிஸ்துவா்களின் 40 நாள்கள் தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் விழாவை புதன்கிழமை அனுசரித்தனா்.
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் தூய இருதய ஆண்டவா் தேவாலயத்தில் முன்னாள் வேலூா் மறைமாவட்ட பரிபாலகா் அருட்பணி. இ.ஜான் ராபா்ட் தலைமையில் பங்குதந்தை அந்தோணி இணைந்து சாம்பல் புதன் திருப்பலி நடத்தினா் (படம்).
அகரசேரி மெசியா தியான மைய இயக்குநா் அருட்பணி அக்டேவியஸ் சாம்பல் புதன் குறித்து மறையுரை ஆற்றினாா். இதில் கலந்து கொண்ட பக்தா்களின் நெற்றியில் நாற்பது நாள்கள் நோன்பு தொடக்கத்தை குறிக்கும் விதமாக குருத்தோலை எரித்த சாம்பலை நெற்றியில் சிலுவை அடையாளமிட்டனா். இதில் திராளான கிறிஸ்துவா்கள் கலந்து கொண்டனா்.
இதே போல் வாணியம்பாடி கோணாமேடு சகாயமாத கோவில், காமராஜபுரம் பதுவை அந்தோணியாா் கோவில் உள்பட கத்தோலிக்க கிறிஸ்துவ ஆலயங்களில் சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது.